மேஷம் முதல் மீனம் வரையி லான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்…

மேஷம்

கூட்டு முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

ரிஷபம்

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். புதிய வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உத்தியோகத்தில் கிடைக்கும்.

மிதுனம்

நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்ளும் நாள். உடல்நலம் சீராகும். வரன்கள் வாயில்தேடி வரும். அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் உண்டு.

கடகம்

கண்ணும் கருத்துமாக செயல்படும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

சிம்மம்

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய பாதை புலப்படும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி

கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாத நாள். கூடப்பிறந்தவர்களால் தொல்லையுண்டு. விரயங்கள் அதிகரிக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

துலாம்

வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்

தெய்வப்பற்று மேலோங்கும் நாள். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

தனுசு

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிய நாள். வாகன பழுதுச்செலவுகள் உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி தேவை.

மகரம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு இருமடங்காகும். மனக்கசப்பு தரும் சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கும்பம்

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.

மீனம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *