சென்னை:
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து பேசியதாவது:
* இருமொழிக் கொள்கை, மாநில உரிமையில் திமுகவை த.வகெ. அரசு பின்பற்றுகிறது.
* நான் முதல்வன் திட்டத்தை முடக்கவோ, மாற்றவோ தவெக அரசுக்கு எந்த திட்டமும் இல்லை.
* திமுக ஆட்சியின் மீதான ஏமாற்றம் தான் த.வெ.க.விற்கான வாய்ப்பு. தவெ.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
* சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் பிரச்சனைகளுக்கு 5 ஆண்டு தி.மு.க. ஆட்சியே காரணம்.
* மின்தடையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்ததே திமுக தான்.
* விவசாயிகள் சங்கத்தலைவர் மீது குண்டாஸ் போட்ட அரசு திமுக அரசு தான்.
* நான் முதல்வன் என கூறிவிட்டு ஒரே குடும்பத்தில் இருந்து முதலமைச்சர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
* பள்ளி மாணவர்களின் புத்தக பையில் படம் இல்லாவிட்டாலும் லேப்டாபில் ஏன் முதலமைச்சர் படத்தை போட்டீர்கள்?.
* 3 வருடமாக தொழில்நுட்ப கோளாறு என கூறி நேரலையை துண்டித்தார் முன்னாள் சபாநாயகர்.
* அரசு பள்ளியில் ரீல்ஸ் எடுத்தவர் நேற்று கட்சியில் நீக்கப்பட்டுள்ளார்.
* கூட்டணி கட்சியினர் அவர்கள் தேவைக்கு சோபா வாங்கியுள்ளனர். கூட்டணி தலைவர்களுக்கு திமுகவினர் பிளாஸ்டிக் சேர் கொடுத்தனர்.
* சிங்கப்பெண்கள் திட்டத்தை இனி யாரும் தவறாக பேச அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.