முன்​னாள் அமைச்​சர்​கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்​தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் இது​வரை ஒப்​புதல் கொடுக்​க​வில்​லை – அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!!

சென்னை:
சட்டப்பேரவை வளாகத்​தில் மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

முதல்​வர் தனது உரை​யில்,‘கட்சி நிதி’ என சொன்ன உடனே, பயத்​தில் திமுக​வினர் எழுந்து நின்று முதல்​வரை பேச விடா​மல், தடுக்க முயன்​றனர்.

அதன்​பிறகு, திருட​னுக்கு தேள் கொட்​டியது போல, உள்ளே இருக்க முடி​யாமல், பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்​தனர்.

பள்​ளிக்​கல்​வித் துறை​யில் ரூ.400 கோடி கட்சி நிதி தொடர்​பாக ஊடகங்​களி​ல் செய்தி வெளி​யானது. இதுதொடர்​பாக நிச்​ச​யம் வழக்கு தொடுக்​கப்​படும்.

மின்​சா​ரத் துறைக்கு புதி​தாக நியமனம் செய்​யப்பட உள்​ளவர்​களுக்கு 24-ம் தேதி (இன்​று) காலை பணி நியமன ஆணை​களை முதல்​வர் வழங்​கு​கிறார்.

25-ம் தேதி மின்​சா​ரத் துறை குறித்து வெள்ளை அறிக்​கையை வெளி​யிடு​வோம்.

முன்​னாள் அமைச்​சர்​கள் அனிதா ராதாகிருஷ்ணன், செந்​தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் இது​வரை ஒப்​புதல் கொடுக்​க​வில்​லை.

எப்​போதும் பாஜக, அவர்​களுக்கு ஆதாயமில்​லாமல் ஒருகோப்பை நிறுத்தி வைக்​காது. ஏதோ உத்​திர​வாதம் தி​முக கொடுத்​திருக்​கிறது என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *