பராபவ ஆண்டு, ஆனி-15 (திங்கள்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பவுர்ணமி (முழுவதும்)
நட்சத்திரம் : மூலம் மறுநாள் விடியற்காலை 5.16 வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த / சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு
பௌர்ணமி. காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் முப்பழ பூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம்.
திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மஹாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் – வரவு
ரிஷபம் – யோகம்
மிதுனம் – சுபம்
கடகம் – ஜெயம்
சிம்மம் – விருப்பம்
கன்னி – உழைப்பு
துலாம் – உதவி
விருச்சிகம் – செலவு
தனுசு – நன்மை
மகரம் – உற்சாகம்
கும்பம் – விவேகம்
மீனம் – திறமை