அமைச்​சர் டி.சரத்​கு​மாரை போதைப்​பொருள் சர்ச்​சை​யின் கீழ் பதவியி​லிருந்து நீக்க வலி​யுறுத்தி திமுக மாணவர் அணி சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் !!

சென்னை:
அமைச்​சர் டி.சரத்​கு​மாரை போதைப்​பொருள் சர்ச்​சை​யின் கீழ் பதவியி​லிருந்து நீக்க வலி​யுறுத்தி திமுக மாணவர் அணி சார்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

சென்​னை​யில் தடையை மீறி கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்ட முன்​னாள் அமைச்​சர்​கள் மா. சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் பிரியா உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை அமைச்​சர் டி.சரத்​கு​மார், போதைப்​பொருள் பயன்​படுத்​தி​யது போன்ற வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி பெரும் சர்ச்​சை​யானது. இதையடுத்து அவரை பதவியி​லிருந்து நீக்​கக் கோரி, திமுக மாணவரணி கண்டன ஆர்ப்​பாட்​டத்தை அறி​வித்​தது.

இதற்​காக எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானம் அரு​கில் திமுக​வினர் நேற்று மேடை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அங்கு வந்த போலீ​ஸார், ‘போ​ராட்​டத்​துக்கு 5 நாட்​களுக்கு முன்பே அனு​மதி பெற வேண்​டும்’ எனக் கூறி பணி​களைத் தடுத்து நிறுத்​தினர்.

இதற்கு திமுக நிர்​வாகி​கள் எதிர்ப்பு தெரிவிக்​கவே, இருதரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. பிறகு அவர்களை போலீ​ஸார் குண்​டுக்​கட்​டாக கைது செய்​தனர்.

இதைத் தொடர்ந்​து, முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட திமுக​வினர் சம்பவ இடத்​துக்​குத் திரண்டு வந்​தனர்.

போலீ​ஸாரின் தடையை​யும் மீறி, சரத்​கு​மார் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அப்​போது செய்​தி​யாளர்​களிடம் பேசிய மா.சுப்​பிரமணி​யன், “அமைச்​சர் தனது செல்​போன் மீது கார்டை வைத்து பவுடரை நசுக்​கு​வதும், கையில் 500 ரூபாய் நோட்டை மடித்து வைத்​திருந்த பாணி​யும், உயர்ரக போதைப்​பொருள் பயன்​படுத்​துபவர்​கள் உபயோகிக்​கும் நுகர்வு முறை​யாகும்.

ஆனால், இதற்​குப் பதிலளித்த அமைச்​சர், பிறந்து சில நாட்​களே ஆன தன் குழந்​தைக்கு மாத்​திரை நசுக்​கினேன்' என்​கிறார். ஆனால் அவரது மனை​வியோ,ஒன்​றரை வயது குழந்​தைக்​குப் பால் கொடுக்​கச் சென்​ற​போது மாத்​திரையை நசுக்​கி​னார்’ என்று முரண்​பா​டாக் கூறுகிறார். எனவே அமைச்​சர் மீது சட்​டப்​பூர்வ நடவடிக்​கை​யும் எடுக்க வேண்​டும்” என்​றார்.

முன்​னாள் அமைச்​சர் பி.கே. சேகர்​பாபு கூறும்​போது, `சம்​பந்​தப்​பட்ட அமைச்​சரை உடனடி​யாகப் பதவி நீக்​கம் செய்​து, மருத்​து​வப் பரிசோதனைக்கு உட்​படுத்த வேண்​டும். அவர்கொக்​கைன்’ உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்று ஆய்வறிக்கை கோர வேண்டும்” என்றார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஸ்டாலின் கண்டனம் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பதிவில், “போதைப் பொருள் பயன்படுத்தியது போல், ‘தக் லைப் ஸ்டோரி’ போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த திமுகவினர் கைது; தவெக ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்கு; எ.வ.வேலு வீட்டில்ரெய்டு…

இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதல்வரின் எண்ணம் நீடிக்காது” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *