உலகக் கோப்பையில் தான் பிடித்த கேட்ச் தனது வாழ்க்கையின் “மிக முக்கியமான கேட்ச்” – சூர்யகுமார் யாதவ்!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது டேவிட் மில்லரின் விக்கெட் தான். டேவிட் மில்லர் அடித்த சிக்சரை சூர்யகுமார் யாதவ் சாமர்த்தியமாக செயல்பட்டு கேட்ச் ஆக மாற்றினார். இது இந்திய வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பையில் தான் பிடித்த கேட்ச் தனது வாழ்க்கையின் “மிக முக்கியமான கேட்ச்” அல்ல என்று சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது சமூக ஊடகங்களில் ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது. அவர் தேவிஷா ஷெட்டியை திருமணம் செய்துகொண்டார்.

சூர்யகுமார் யாதவ் – தேவிஷா ஷெட்டியின் எட்டாவது திருமண நாள் கொண்டாட்டத்தின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்த பதிவில் சூர்யகுமார் யாதவ் தனது மனைவியுடன் இணைந்து ராட்சத கேக் வெட்டும் படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவுக்கு, “நான் பிடித்த அந்த கேட்ச் நேற்றுடன் 8 நாட்களை நிறைவு செய்தது. ஆனால் என் வாழ்நாளில் மிக முக்கியமான கேட்ச் 8 ஆண்டுகளுக்கு முன்பே பிடிக்கப்பட்டு விட்டது! 8 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது, எல்லையற்ற ஆண்டுகள் செல்ல வேண்டும்,” என்று தலைப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆறு மணி நேரத்தில் 700,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது. பல ரசிகர்கள் மனதை கவரும் தலைப்பை பதிவு செய்து தம்பதியினரை வாழ்த்தினர்.

சூர்யகுமார் யாதவ் (33) தேவிஷா (30) என்பவரை ஜூலை 7, 2016 அன்று திருமணம் செய்து கொண்டார். இருவரும் முதன் முதலில் 2010 இல் சந்தித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *