முதல்​வர் விஜய்​யிடம் ஒரு தனி வசீகரம் உள்​ளது; பெண்​கள், ஆண்​கள், இளைஞர்​கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்​கிறார்​கள் – வைகோ!!

திருநெல்வேலி:
முதல்​வர் விஜய்​யிடம் ஒரு தனி வசீகரம் உள்​ளது. பெண்​கள், ஆண்​கள், இளைஞர்​கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்​கிறார்​கள் என்று மதி​முக பொதுச்செயலர் வைகோ தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: எந்த ஆபத்து வந்​தா​லும் எதிர்​கொள்​ளும் உறுதி மதி​முக​வுக்கு மட்​டுமே இருந்​தது.

திமுக எங்​களை மிரட்​டு​வது போன்று நடத்​தி, உதயசூரியன் சின்​னத்​தில்​தான் போட்​டி​யிட வேண்​டும் என நிர்​பந்​தம் செய்​தது.

இப்​போது குதிரை பேரம் பற்றி பேசுகிறது.ஆனால், அதை ஆரம்​பித்​ததே திமுக​தான்.

எங்​கள் கட்​சியை சேர்ந்த கம்​பம் ராமகிருஷ்ணனை ராஜி​னாமா செய்ய வைத்​து, திமுக​வில் சேர்த்​தனர்.

முதல்​வர் தலை​மை​யில் நடை​பெற்ற தோழமை கட்​சிகள் கூட்​டம் மிக​வும் கண்​ணி​ய​மாக நடை​பெற்​றது.

தற்​போது ஊழல் இல்​லாத ஆட்சி நடை​பெற்று வரு​கிறது. திமுக ஆட்​சி​யில் ஊழல் கொடிகட்​டிப் பறந்​தது.

அந்த ஊழலை தற்​போது முதல்​வர் இல்​லாமல் ஆக்​கி​யுள்​ளார். 5 ஆண்​டு​களும் விஜய் ஆட்​சி​தான் நடை​பெறும்.

அடுத்த தேர்​தலிலும் அவரே வெற்றி பெறு​வார். திமுக கூட்​ட​ணி​யில் இருந்​த​போது ஏன் இதை பேச​வில்லை என்று கேட்​கிறார்​கள்.

அப்​போது பேசி​யிருந்​தால் மறு​நாளே கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​டிருப்​போம். மற்ற கூட்​ட​ணிக்கு சென்​றிருந்​தால் அதை​யும் விமர்​சித்​திருப்​பார்​கள்.

விஜய்யிடம் வசீகரம்: தமிழக வெற்றிக் கழகத்​தை​யும் திரா​விட இயக்​கத்​தின் ஒரு கூறாகவே பார்க்​கிறேன். உயிரை கொடுக்​கும் தொண்​டர்​கள் என்​னுடன் இருக்​கிறார்​கள்.

அவர்​கள்​தான் கட்​சியை காப்​பாற்​று​வார்​கள். இடைத்​தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிட மாட்​டோம்.

முதல்​வர் விஜய்​யிடம் ஒரு தனி வசீகரம் உள்​ளது. பெண்​கள், ஆண்​கள், இளைஞர்​கள் என அனைத்து தரப்பினரும் அவரை ஆதரிக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *