அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்​பதை வலி​யுறுத்​தி, மீண்​டும் போராட்டக் களத்​துக்கு தயாராகும் ஜாக்டோ ஜியோ!!

சென்னை:
அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்​பதை வலி​யுறுத்​தி, மீண்​டும் போராட்டக் களத்​துக்கு தயா​ராவ​தாக, ஜாக்டோ ஜியோ அமைப்​பின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் கு.வெங்​கடேசன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை:

கடந்த 2003 ஏப். 1-ம் தேதிக்குப் பிறகு பணி​யில் சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​களுக்கு ஓய்​வூ​தி​ய​மும், ஓய்​வூ​திய காலப் பலன்​களும் அறவே மறுக்​கப்​பட்​டுள்​ளது.

பணி​யாளர் பகுப்​பாய்வுக் குழு என்ற ஒன்று அமைக்​கப்​பட்டு பணி​யிடங்​களை தனி​யார் வசம் ஒப்​படைக்​கும் நடவடிக்கை என்​பது, முன்பு எவ்​வாறு வேலைநியமன தடைச் சட்​டம் மூலம் அமல்​படுத்​தப்​பட்​டதோ, அதே​போல், வேறு வடி​வில் அரசு பணி​யில் எதிர்​காலத்​தில் வேலை​வாய்ப்பை முற்​றி​லு​மாக பறிக்​கக்​கூடிய நிலையை உரு​வாக்​கக் கூடிய திசை வழியை நோக்கி அரசு நிர்​வாகம் சென்று கொண்​டிருக்​கிறது.

தமிழகத்​தில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிப​தி​கள், மாவட்ட நீதிப​தி​கள் ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்ட ஊதிய மாற்ற நிலுவை தொகை, நிதி ஆதா​ரம் இல்லை என்ற காரணத்​தால், ஆசிரியர்​கள், அரசு ஊழியர்​களுக்கு மறுக்​கப்​படு​கிறது.

அந்த வகை​யில், ஏறக்​குறைய 2003 போன்ற ஒரு சூழல்​தான் தற்​போதும் உள்​ளது. நமது உரிமை​களை ஒன்​று​ பட்டு கேட்க தவறி​னால், என்​றுமே அவற்றை பெற முடி​யாது.

பழைய ஓய்​வூ​தி​யத்தை மீண்​டும் அனை​வரும் பெற வேண்​டு​மா​னால், ஒன்​று​பட்ட சக்​தி​யாக களத்​தில் நிற்க வேண்​டும்.

2003 ஏப்​.1-ம் தேதிக்கு பிறகு பணி​யில் சேர்ந்த நம் இளை​யோ​ருக்கு ஓய்​வூ​தி​யத்தை உத்​திர​வாதப்​படுத்த கூடிய ஒரு ஜனநாயக அறவழி போராட்ட களத்​தில் இளைய தலை​முறையோடு இணைந்து மீண்​டும் களம் காண்​போம்.

அனை​வருக்​கும் பழைய ஓய்​வூ​தி​யம் என்ற புதிய சகாப்​தத்தை படைக்கத் தயா​ராவோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *