சென்னை:
“அரசு வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை எனும் புகார், தூய சக்தி எனும் பெயரில் மறைந்திரு க்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஒருபுறம் வெள்ளை பவுடர் புகழ் அமைச்சர், மறுபுறம் பொய் சொல்வதையே தன் தொழி லாக கொண்டு நிழல் முதலமைச்சராக செயல்படுவதாக சொல் லபடும் மற்றொரு அமைச்சர், இதற்கிடையில் அரசு வழக் கறிஞர்கள் நியமனங்களுக்காக சொந்தக் கட்சியிலேயே லஞ்சம் வசூலிக்கப் படுவதாக புகாருக்குள்ளாகியிருக்கும் மூத்த அமைச்சர், ஊழலை ஒழிப்போம் என கொக்கரித்த முதல்வர் ஜோசப் விஜய் சொன்ன தூய சக்தி அரசியல் இதுதானா?
தொட மாட்டேன், தொட்டவர்களையும் விடமாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பாக சட்டப்பேரவையையே ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாற்றிவிட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு, சினிமா வசனங் களை ஒரே டேக்கில் அள்ளிவிட்ட முதல்வர் ஜோசப் விஜய் பொது வெளியில் போதைப்பொருள் பயன்படுத்துவது போல வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளான வெள்ளை பவுடர் புகழ் அமைச்சர் மீது இதுவரை விசாரணை கூட நடத்த முன்வராதது ஏன்?
கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காவல் துறையின் மூலமாக பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக கூறி முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையி னரையும், அவர்கள் ஆற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளையும் கொச்சைப் படுத்தும் வகையில் பேசி, அவ்வழக்கின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கில் செயல்படும் பொய்த் துறைக்கென்றே பிரத்யேகமாக நியமிக்கப்பட்டவராக சொல்லப்படும் அமைச்சரின் அரைவேக்காட்டுத் தனத்தை உண்மையான முதல்வர் ஜோசப் விஜய் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?
வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி, அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க சொந்தக் கட்சி நிர்வாகிகளிடமே வசூல் வேட்டை என அடுத்தடுத்து புகார்கள் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வருவது, தூய சக்தி எனும் பெயரில் மறைந்திருக்கும் ஊழல் சக்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.
குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரீல்ஸ் கன்டென்டுக்கு ஏற்றவகையில் பொதுவெளியில் கர்ஜித்து விட்டு, தற்போது அதற்கு முரணாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய வர்களையும், லஞ்சப் பணம் கொடுப்பவர்களையும் அரசு வழக்கறிஞர் களாக நியமிப்பதன் மூலம் ஏற்கெனவே தங்களால் வெள்ளாவி வைத் து வெளுக்கப்பட்ட ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடை யவர்களை தவெக அரசும், அதன் முதல்வரும் பாதுகாக்க முனைகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல தவெக ஆட்சியில் புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த வழக்கறிஞர் நியமன ஊழலே அடுத்த ஐந்தாண்டு கால தவெக ஆட்சியின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
ஆகவே, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஏற்பட்டிருக்கும் குளறுபடி களை கலைந்து, வெளிப்படையான நியமன நடை முறைகளை மேற் கொண்டு தகுதியுடைய வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்திட வேண்டும் என வலியுறுத் துவதுடன், இந்த நியமனத்தில் புகாருக்கு உள்ளானவர்கள் மீது விசாரணை மேற் கொண்டு ஊழல் முறைகேடுகளுக்கான முகாந்திரம் இருக்கும் பட்ச த்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.