சென்னை,
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 139 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவக் கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1, 393 சுகாதார ஆய்வாளர் களுக்கு பணி நியமன ஆனைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார்.
தொடர்ந்து அனைத்து சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் பெற உதவும் வகையில் ‘நலம் TN’ (Nalam TN) புதிய ஒருங்கிணைந்த இணை யதளம் மற்றும் ‘நலம் ஏ.ஐ.’ வாட்ஸ்-அப் செயலியை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
இந்த இணையதளம் மூலம் கார்ப்பரேட்கள் முதல் பொதுமக்கள் என நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை மருத்துவமனைகளுக்கு எளிமையாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.