தமிழ்​நாட்​டில் மீட்​டர் கணக்​கீடு மற்​றும் பில்​லிங் முறை​யில் குறை​பாடு காரண​மாக மின் நுகர்​வோர்​களுக்கு அதி​கப்​படி​யான மின்கட்டணம் பதிவு!!

சென்னை:
தமிழ்​நாட்​டில் மீட்​டர் கணக்​கீடு மற்​றும் பில்​லிங் முறை​யில் குறை​பாடு காரண​மாக மின் நுகர்​வோர்​களுக்கு அதி​கப்​படி​யான மின் கட்​ட​ணம் பதி​வாகி​யுள்​ள​தாக புகார் எழுந்​துள்​ளது.

புதிய தவெக அரசு அமைந்​ததும் வீடு​களுக்கு 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​கப்​படும் எனவும், 500 யூனிட்​டுக்கு குறை​வாகப் பயன்​படுத்​து​வோருக்கு இச்​சலுகை பொருந்​தும் எனவும் அறிவிக்​கப்​பட்​டது.

அதேசம​யம் 500 யூனிட் மேல் உபயோகிப்​போருக்கு வழக்​கம்​போல் 100 யூனிட் இலவசம் என தெரிவிக்​கப்​பட்​டது. தற்​போது வீட்டு மின் நுகர்​வோருக்​கான கட்​ட​ணம் வழக்​கத்தை விட அதி​கம் வந்​துள்​ள​தாக பொது​மக்​களிடையே புகார்​கள் எழுந்​தன.

வழக்​க​மாக வெயில் காலங்​களில் மின்​சார பயன்​பாடு அதி​கரிப்​ப​தால் மின் கட்​ட​ணம் உயர்​வது வழக்​கம்.

ஆனால், இந்த முறை வழக்​கத்​துக்கு மாறாக மிக அதிக மின்​சார கட்டண பில் வந்​துள்​ள​தாக பலரும் சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டனர்.

ஆனால் மின்​வாரி​யம் தரப்​பில் அதி​கப்​படி​யான மின் பயன்​பாடு காரண​மாகத்​தான் கட்​ட​ணம் அதி​கம் வந்​துள்​ள​தாக​வும், குறை​வாக பயன்​படுத்​தி​ய​வர்​களுக்கு குறை​வான கட்​ட​ணமே வந்​த​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், மீட்​டர் கணக்​கீடு மற்​றும் பில்​லிங் செயல்​முறை​களில் ஏற்​பட்ட குறை​பாடு​களால் சில இடங்​களில் மின் நுகர்​வோருக்கு தவறான மற்​றும் அதி​கப்​படி​யான கட்​ட​ணம் பதி​வாகி​யுள்​ள​தாக நெல்லை மண்டல மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் சுற்​றறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: மின்​சா​ரத் துறை​யின் சில பிரிவு​களில் தொடர்ந்து நடை​பெற்று வரும் அசா​தா​ரண​மான பில்​லிங் முறை​களால் பொது​மக்​களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.

மீட்​டர் கணக்​கீடு அல்​லது பில்​லிங் செயல்​முறை​களில் ஏற்​பட்ட குறை​பாடு​களால் வீட்டு மின் நுகர்​வோருக்கு தவறான மற்​றும் அதி​கப்​படி​யான மின் கட்​ட​ணங்​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மின்​வாரிய அதி​காரி​களால் மதிப்​பீட்​டின் அடிப்​படைக் கள ஆய்வு முறை​யாக மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. தமிழகத்​தில் மின்​னியல் பகிர்​மான வட்​டங்​களில் (இடிசி) ஆய்வு மேற்​கொள்​ளப்​பட​வில்​லை.

மேலும், தலைமை அலு​வல​கம் தொடர்ந்து வழங்​கி​யுள்ள வழி​காட்​டு​தல்​களின்​படி​யும், சரி​யான மதிப்​பீடு செய்​ய​வும், தவறான பதிவு​களை தவிர்க்​க​வும், நுகர்​வோர் திருப்​தியை உறுதி செய்​ய​வும் வேண்​டிய நிலை​யில் இன்​னும் பல்​வேறு குறை​பாடு​கள் காணப்​படு​வது வருத்​தத்​திற்​குரியது.

மின்​வாரிய அதி​காரி​கள் தங்​களது கடமை​களை முறை​யாக செய்​திருந்​தால் இந்​தப்பிரச்​சினையை ஆரம்ப நிலை​யிலேயே தவிர்த்​திருக்​கலாம். அதன்​படி, ஒவ்​வொரு பிரி​விலும் திடீர் ஆய்வு மேற் கொள்ளவேண்​டும்.

கடமை​யில் அலட்​சி​யம் காட்​டும் அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் மீது தேவை​யான ஒழுங்கு நடவடிக்கை உட்பட கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும்.

மேலும், மேற்​பார்வை பொறி​யாளர் தங்​களின் கட்​டுப்​பாட்​டில் உள்ள அலு​வலர்​கள் சரி​யான முறை​யில் பணி செய்​கிறார்​களா என்​பதை ஆய்வு செய்ய வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *