2026 -ல் அம்மாவின் ஆட்சியை உறுதியாக நாங்கள் அமைப்போம் – ஓபிஎஸ் பேட்டி!!

2026ல் ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என்று ஓபிஎஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசை நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் முன்னாள் முதல்வரும் , பாஜக கூட்டணியின் ராமநாதபுரம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்த மோடியை மீண்டும் பிரதமராக வரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக வெற்றி பெறுவேன். இந்த தேர்தல் முடிவில் அதிமுக எங்கள் வசம் வரும், எடப்பாடி பழனிசாமி எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை.

அதிமுக உறுதியாக எங்கள் பக்கம் வந்து சேரும் .2026 இல் அம்மாவின் ஆட்சியை உறுதியாக நாங்கள் அமைப்போம். கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *