‘ராயன்’ திரைப்படத்துக்காக ஒரு இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றது ஒரு ஆசியாகும்!! தனுஷ் நெகிழ்ச்சி….

சென்னை:
‘ராயன்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு, 2024-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிறந்த சமூக அக்கறையுடனான படைப்புக்கான தேசிய விருது, அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகராக (சிறப்புக் குறிப்பு) தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“’ராயன்’ படத்துக்காக சிறந்த சிறந்த பிராந்தியத் திரைப் படத்துக்கான தேசிய விருதையும், ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான (சிறப்புக் குறிப்பு) தேசிய விருதையும் பெற்றதில் நான் உண்மையிலேயே பணிவும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

மதிப்புக்குரிய தேசிய விருதுகள் நடுவர் குழுவுக்கும் தேர்வு முகமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது திரையுலகப் பயணம் முழுவதும் தங்களின் மாறாத ஆதரவை வழங்கி வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக ஊடகத் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஒரு நடிகராக இது எனது மூன்றாவது தேசிய விருது மற்றும் ஒரு இயக்குனராக எனது முதல் தேசிய விருது ஆகும்.

எனது பலத்தின் தூண்களாக விளங்கும் எனது ரசிகர்கள் இல்லாமல் இதில் எதுவுமே சாத்தியமாகி இருக்காது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி.

‘கேப்டன் மில்லர்’ படத்துக்கான இந்த அங்கீகாரம் எனது இதயத்தி துக்கு மிகவும் நெருக்கமானது, ஏனெனில் இது இன்றுவரை எனது மிகச்சிறந்த நடிப்பு என்று நான் எப்போதும் நம்புகிறேன்.

நான் மிகவும் போற்றுகிற ஒரு நடிப்புக்காக இந்தச் ‘சிறப்பு குறிப்பு’ கவுரவத்தைப் பெறுவது இந்த அங்கீகாரத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

மேலும் முதலாவது என்பது எப்போதும் மறக்க முடியாதது. ‘ராயன்’ திரைப்படத்துக்காக ஒரு இயக்குநராக எனது முதல் தேசிய விருதை வென்றது நான் என்றும் போற்றி மகிழும் ஒரு ஆசியாகும்.

நான் எப்போதும் சொல்வது போல், எண்ணம் போல் வாழ்க்கை” இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *