மேகே​தாட்டு அணை விவ​காரம் குறித்த அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை 10 நாட்​களில் முதல்​வர் அறி​விப்​பார்!! அமைச்​சர் நிர்​மல்​கு​மார் ….

சென்னை:
மேகே​தாட்டு அணை விவ​காரம் குறித்த அடுத்​தகட்ட நடவடிக்​கைகளை 10 நாட்​களில் முதல்​வர் அறி​விப்​பார் என அமைச்​சர் நிர்​மல்​கு​மார் தெரி​வித்​தார்.

கர்​நாட​கா​வில் இருந்து மேட்​டூர் அணைக்குத் தண்​ணீர் வரவில்​லை. மேலும் காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்​ட​வும் அந்த மாநில அரசு தீவிர​மாக முயன்று வரு​கிறது.

இதற்​கிடையே மேகே​தாட்டு அணை கட்​டு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், இந்த அணைக்கு எவ்​வித அனு​ம​தி​யும் மத்​திய அரசு அளிக்​கக்​கூ​டாது எனவும் தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த மாதம் தீர்​மானம் கொண்​டு​ வரப்​பட்​டது.

இந்​நிலை​யில் காவிரி நதிநீர் பங்​கீடு மற்​றும் மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் எடுக்க வேண்​டிய நடவடிக்​கைகள் தொடர்​பாக சட்ட வல்​லுநர்​கள் மற்​றும் காவிரி தொழில்​நுட்​பக் குழு அலு​வலர்​கள் அடங்​கிய உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் அமைச்​சர்​கள் என்​.ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, சி.டி.ஆர்​.நிர்​மல்​கு​மார், தலை​மைச் செயலர் மு.​சாய்​கு​மார், அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண் உள்​ளிட்டோர் கலந்​து​கொண்​டனர்.

இந்​தக் கூட்​டத்​துக்கு பின்​னர் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

மேகே​தாட்டு அணை தொடர்​பாக முதல்​கட்​ட​மாக அனைத்து வல்​லுநர்​கள் மற்​றும் 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக சட்​டப் போராட்​டம் நடத்​திவ ரும் வழக்​கறிஞர்​களு​டன் முதல்​வர் விஜய் தலை​மை​யில் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

அதில் பெறப்​பட்ட ஆலோ​சனை​களின்​படி அடுத்​தகட்ட முடிவு​கள் விரைவில் எடுக்​கப்​படும். இன்​னும் 10 நாட்​களில் என்​னென்ன நடவடிக்கை எடுக்​கப்​போகிறோம் என்​பது முடி​வாகும்.

அனைத்துக் கட்சி கூட்டம்: இந்த விவ​காரத்​தில் மேற்​கொள்ள வேண்​டிய நடவடிக்​கைகள் தொடர்​பாக அனைத்​துத் தரப்​பினரை​யும் அழைத்து முதல்​வர் விஜய் ஆலோ​சனை நடத்​தி​யுள்​ளார்.

மேகே​தாட்டு அணை விவ​காரத்​தில் தமிழக அரசு என்​னென்ன மாதிரி​யான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்​பதை இறு​தி​செய்​து, கண்​டிப்​பாக 10 நாட்​களுக்​குள் முதல்​வர் அறி​விப்பு வெளி​யிடு​வார்.

தேவையெனில் அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தைக் கூட்​டு​வது குறித்​தும் ஆலோ​சித்து உரிய முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *