கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​துக்கு வழங்​கப்​பட்ட அரசு வேலை, அதற்கு எதி​ரான வழக்​கு​களில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பிக்​கும் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது!! நீதிபதிகள்….

மதுரை:
கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​துக்கு வழங்​கப்​பட்ட அரசு வேலை, அதற்கு எதி​ரான வழக்​கு​களில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பிக்​கும் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது என நீதிப​தி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

கரூர் நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசுப் பணி வழங்க தடைகோரி நாம் தமிழர் கட்சி தீரன் திரு​முரு​கன் மற்​றும் வழக்​கறிஞர் சீனிஅகமது ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர்.

மனு​வில், போட்​டித் தேர்​வு,தகுதி அடிப்​படை​யில்​தான் அரசுப் பணி வழங்​கப்பட வேண்​டும். அதை விடுத்து ஒரு சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கி​னால், இது​போன்ற சம்​பவங்​களில் உயி​ரிழப்​பவர்​களும் அரசு வேலை கேட்​கும் நிலை ஏற்​படும்.

தமிழகத்​தில் பல்​வேறு சம்​பவங்​களில் மக்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். அவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்​கப்​பட​வில்​லை.

எனவே, கரூர் சம்​பவம் தொடர்​பான சிபிஐ விசா​ரணை, உச்ச நீதி​மன்ற விசாரணை முடி​யும் வரை அரசுவேலை வழங்க தடை விதித்து உத்​தர​விட வேண்​டும் எனக் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிப​தி​கள், கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​துக்கு தற்​காலிக பணி​தான் வழங்க வேண்​டும்.

பணி நியமனம் தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி உறுப்​பினர் செய​லா​ளர் பதிலளிக்க வேண்​டும் என உத்​தரவிட்​டனர்.

இந்​நிலை​யில் இதே கோரிக்கை தொடர்​பாக திண்​டுக்​கல் வேடசந்​தூரைச் சேர்ந்த சந்​தோஷ்கு​மாரும் மனுத்தாக்​கல் செய்​தார்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அரசு தரப்​பில், பதில் மனு தயா​ராக​வில்லை. விசா​ரணையை தள்​ளி வைக்க வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

அதற்கு நீதிப​தி​கள், அரசு வேலை பெற்​றவர்​கள் முதல் மாத ஊதி​யம் பெறு​வதற்கு முன்​பாக வழக்கை விசா​ரிக்க வேண்​டும். ஜூலை 24-க்​குள் பதில் மனு தாக்​

கல் செய்ய வேண்​டும். தொடர்ந்து அரசு தரப்​பில், 31 பேருக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டது. இதில் 29 பேர் பணி​யில் சேர்ந்​துள்​ளனர் எனக் கூறப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி​கள், அனைத்து பணி நியமன​மும் இறுதி முடிவுக்கு உட்​பட்​டது.

விளம்பர நோக்​கத்​துக்​காக மனு தாக்​கல் செய்​வதை​யும் ஏற்க முடி​யாது. அனைத்து மனுக்​களை​யும் ஜூலை 27-ல் விசா​ரணைக்கு பட்​டியலிட நீதிபதிகள் உத்​தர​விட்​டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *