தமிழ்​நாடும், புதுச்​சேரி​யும் தனித்​தனி​யாக இருந்​தா​லும் நாமெல்​லாம் ஒன்​று​தான்; நமக்​குள் இருக்​கும் இந்த பாச உணர்வு போதும்; வேறு எது​வும் தேவை​யில்​லை – புதுச்சேரியில் விஜய் பேச்சு!!

புதுச்சேரி;
கரூரில் கடந்த செப். 27 அன்று தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தின் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்​தனர்.

இதைத் தொடர்ந்து இரு மாதங்​களாக பொதுக்​கூட்​டங்​கள் எதி​லும் அவர் கலந்து கொள்​ள​வில்​லை. வரும் 16-ம் தேதி ஈரோட்​டில் பிரச்​சா​ரம் மேற்​கொள்ள இருக்​கி​றார். அங்கு பொதுக்​கூட்​டத்​துக்கு இது​வரை​யில் அனு​மதி வழங்​கப்​பட​வில்​லை.

இதற்​கிடையே, புதுச்​சேரி உப்​பளம் துறை​முகம் மைதானத்​தில் நேற்று காலை தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பொதுக் கூட்​டம் நடை​பெற்​றது. மைதானத்​தில் பிரச்​சார வேனின் மேல்​பகு​தி​யில் நின்​றபடி விஜய் பேசி​னார். அவர் பேசி​ய​தாவது:

மத்​திய அரசுக்​குத்​தான் தமிழ்​நாடு ஒரு தனி மாநிலம்; புதுச்​சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். நமக்கு அப்​படி இல்​லை.

தமிழ்​நாடும், புதுச்​சேரி​யும் தனித்​தனி​யாக இருந்​தா​லும் நாமெல்​லாம் ஒன்​று​தான், நாமெல்​லாம் சொந்​தம்​தான். நமக்​குள் இருக்​கும் இந்த பாச உணர்வு போதும்; வேறு எது​வும் தேவை​யில்​லை.

அரசி​யல் என வரும் போது ஒரு முக்​கிய விஷ​யத்தை சொல்ல வேண்​டும். 1977-ல் தமி​ழ​கத்​தில் புரட்​சித்​தலை​வர் எம்​ஜிஆர் ஆட்சி அமைத்​தார்.

ஆனால், அதற்கு முன்பே 1974-ல் புதுச்​சேரி​யில் அதி​முக ஆட்சி அமைந்​தது. ‘நமக்​காக வரு​கி​றார் எம்​ஜிஆர், அவரை மிஸ் பண்​ணி​டாதீங்​க!’ என அலர்ட் செய்​தது புதுச்​சேரி. அப்​படிப்​பட்ட புதுச்​சேரியை நம்​மால் மறக்க முடி​யு​மா?

தமி​ழ​கம் போல புதுச்​சேரி மக்​களும் 30 ஆண்​டு​களாக என்னை தாங்கி பிடிக்​கிறீர்​கள். இந்த விஜய், தமிழ்​நாட்​டுக்கு மட்​டும்​தான் குரல் கொடுப்​பான் என நினைக்​காதீர்​கள், அப்​படிச் செய்​தால் அது தவறு.

புதுச்​சேரி மண்​ணுக்​கும் சேர்த்​து​தான் குரல் கொடுப்​பேன். அது என் கடமை. தமி​ழ​கத்​தில் உள்ள திமுக அரசு போல புதுச்​சேரி அரசு கிடை​யாது.

வேறு ஒரு அரசி​யல் கட்சி நடத்​தும் நிகழ்ச்​சி​யாக இருந்​தா​லும், அந்த நிகழ்ச்​சிக்கு தன் எழுச்​சி​யாக வரும் மக்​களுக்கு பாது​காப்பு கொடுத்​து, பாரபட்​சம் காட்​டா​மல் இந்த அரசு நடந்து கொள்​கிறது.

இந்த புதுச்​சேரி அரசுக்​கும், முதல்​வர் ரங்​க​சாமிக்​கும் மனப்​பூர்​வ​மான நன்​றி. இதைப் பார்த்​தாவது தமிழக திமுக அரசு கற்​றுக்​கொண்​டால் நன்​றா​யிருக்​கும்.

ஆனால், அவர்​கள் கற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள். வரும் தேர்​தலில் 100 சதவீதம் கற்​றுக்​கொள்​வார்​கள், அதை நம் மக்​கள் பார்த்​துக் கொள்​வார்​கள். புதுச்​சேரி மக்​களுக்கு ஒன்றை மட்​டும் சொல்​லிக் கொள்​கிறேன். திமுகவை நம்​பாதீர்​கள். நம்ப வைத்து ஏமாற்​று​வது​தான் திமுக​வின் வேலை.

புதுச்​சேரி​யில் கூட்​ட​ணி​யில் இருந்​தா​லும் மத்​திய அரசு எதை​யும் கண்​டு​கொள்​ள​வில்லை என உங்​களுக்கு நன்​றாக தெரி​யும். புதுச்​சேரிக்​கான மாநில அந்​தஸ்து கோரிக்​கையை மட்​டுமா கண்​டு​கொள்​ள​வில்​லை, வளர்ச்சி ஏற்​பட​வும் துணை நிற்​க​வில்​லை.

‘புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வேண்​டும்’ என சட்​டப்​பேர​வை​யில் பல முறை தீர்​மானம் போட்டு மத்​திய அரசுக்கு அனுப்பி வைத்​துக்​கொண்டே இருக்​கி​றார்​கள்.

பல கோரிக்​கை​களை தீர்க்க புதுச்​சேரி அரசுக்​கும், மக்​கள் நலத்​திட்​டங்​களுக்​கும் உண்​மை​யாக துணை நிற்க வேண்​டும். தமி​ழ​கத்தை ஒதுக்​கு​வது போல புதுச்​சேரியை​யும் ஒதுக்​கக் கூடாது.

20 லட்​சம் பேர் வாழும் புதுச்​சேரி மத்​திய யூனியன் நிதிக்​குழு​வில் இடம்​பெற​வில்​லை. இதனால் மாநில நிதி பகிர்​வு, யூனியன் நிதி பகிர்வு ஒதுக்​க​வில்​லை.

தோராய​மாகவே மத்​திய அரசு புதுச்​சேரிக்கு நிதி விடுவிக்​கிறது. இந்த நிதி​யும் அரசு ஊழியர்​கள் சம்​பளம், ஓய்​வூ​திய திட்​டங்​களுக்கே செல்​கிறது.

எஞ்​சிய தேவைக்கு வெளிச்​சந்​தை​யிலும், கடன் பத்​திரங்​கள் மூல​மும் புதுச்​சேரி அரசு கடன் வாங்​கு​கிறது. இந்த நிலைமை மாற மாநில அந்​தஸ்​து​தான் ஒரே வழி. இது புதுச்​சேரி மக்​களின் பல்​லாண்டு கால கோரிக்​கை.

புதுச்​சேரிக்கு போதிய நிதி வரத்து இல்​லாத​தால், வெளியே கடன் வாங்க வேண்​டிய​தாக உள்​ளது.

கடனை குறைத்து தற்​சார்பு திட்​டங்​கள் வகுக்க வேண்​டும். மாநில அந்​தஸ்து பெற்​றால் மட்​டுமே போதாது, தொழில் வளர்ச்​சி​யும் தேவை. புதுச்​சேரி தென்​னிந்​தி​யா​வின் முன்​னணி தொழில்​மைய​மாக மாற அனைத்து முயற்​சிகளை​யும் எடுக்க வேண்​டும்.

மீன்​பிடிக்​கச் செல்​லும் காரைக்​கால் மீன​வர்​களை அடிக்​கடி கைது செய்​யும் இலங்கை கடற்​படை, படகு​களை​யும் பறி​முதல் செய்​கிறது.

நீண்ட போராட்​டத்​துக்​குப் பின் மீன​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டாலும், படகு​கள் கிடைக்​காமல் மோச​மான நிலைக்கு தள்​ளப்​படு​கின்​ற​னர்.

இந்த நிலை மாற வேண்​டும். மறு​படி​யும் சொல்​கிறேன். இந்த விஜய், புதுச்​சேரி மக்​களுக்​காக​வும் எப்​போதும் துணை நிற்​பான்.

வரும் புதுச்​சேரி தேர்​தல் களத்​தில் தவெக கொடி பட்​டொளி வீசி பறக்​கும். நம்​பிக்​கையோடு இருங்​கள். நல்​லதே நடக்​கும், வெற்றி நிச்​சயம் என்று தெரிவித்​தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *