பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும்!!

ஆடி மாத பவுர்ணமியில் சந்திர பகவானை வழிபடுவதோடு, வீட்டின் வாசற்படியில் வெற்றிலை வைத்து விளக்கு ஏற்றி வழிபடுவது சிறந்தது.

இந்த வழிபாட்டை மேற்கொள்ள, பூஜைக்குப் பயன்படுத்தப் படும் பித்தளைத் தட்டில் 2 வெற்றிலைகளை வைத்து, அதன் மீது சிறிதளவு பச்சைக் கற்பூரம் தடவ வேண்டும். பின்னர், விளக்கில் 2 திரிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்து ஏற்ற வேண்டும்.

இன்று இரவே பவுர்ணமி தொடங்குவதால் இன்று இரவு முதல் விளக்கை ஏற்றி வழிபடலாம். இந்த வழிபாட்டை முறையாக மேற் கொண்டால் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வரும் பிரச்சனைகள் நீங்கி, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் மற்றும் அஷ்டலட்சுமியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், கணவன்-மனைவி இடையே நிலவும் மனக்கசப்புகள் விலகி, நல்ல புரிதலும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும் என நம்பப்படுகிறது.

வீடு, வாசல், வாகனம், தாயார் உள்ளிட்டவற்றைக் குறிக்கும் 4-ம் பாவத்துடன் சந்திரன் தொடர்புடையவர் என்பதால், பவுர்ணமி நாளில் சந்திர வழிபாட்டுடன் வெற்றிலை விளக்கு ஏற்றி வழிபடுவது அஷ்டலட்சுமியின் அருளைப் பெற உதவும் என்கின்றனர் பக்தர்கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *