தவெக ஆட்சியில் தொடர்ந்து மாற்றப்படும் திட்டப் பெயர்கள்!!

சென்னை:
தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘தாயுமானவர்’ திட்டத்தின் பெயர் தற்போது ‘பொது விநியோகத் திட்டம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்பதற்கு பதில் பொது விநியோகத் திட்டம் என குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தவெக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

முன்னதாக, நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு, அறிக்கை வெளியாகி உள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நேரடியாக நியாய விலைக்கடைப் பொருட்களை வழங்கும் ஒரு சிறப்புச் சமூக நலத் திட்டமாகும்.

கூட்டுறவுத் துறையின் மூலம் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்படுகின்றன.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *