தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது.
ஆடி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது கூழும், தெருவுக்கு தெரு இருக்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்களும் தான்.
சேலம் சாமிநாதபுரம் வண்டி பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு 6 அடி உயரத்தில் சுதை வடிவில் பக்தர்களுக்கு சமயபுரம் மாரியம்மன் அருள் பாலிக்கிறார்.
குழந்தை வரம் மற்றும் நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக உள்ளதால் அமாவாசை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
மேலும் சூலி மாகாளி அம்மன் சிலையும் தற்போது அங்கு நிறுவப்பட்டுள்ளது.
அமாவாசையில் வழங்கப்படும் கும்ப படையல் உணவை 3 அமாவாசையில் வந்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பத பக்தர்களின் பெரும் நம்பிக்கையாக உள்ளது.
சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் கூடி மாவிளக்கு போடுதல், பொங்கல் வைத்தல் என நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக அமாவாசை காலங்களில் அதிக அளவில் பக்தர்கள் கோவிலில் குவிவார்கள். அவர்கள் அம்மனை மனமுருக வேண்டி தங்களது வரங்களை பெற்று செல்கிறார்கள்.
மேலும் ஆடி மாதத்தில் வரும் ஆடிபூரம் நிகழ்ச்சி இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும்.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து அம்மன் அருள் பெற்று செல்வார்கள்.
இது குறித்து கோவில் தலைமை பூசாரி சதீஷ்குமார் கூறியதாவது-
பிரசித்திபெற்ற சேலம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறந்து இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். காலை 9 மணி, மதியம் 12 மணி, இரவு 7 மணி என 3 கால a