தோஷங்களை நீக்கும் ஐயப்ப தரிசனம்!!

சாதாரண மனிதன் ஒருவன் அவன் செய்த கர்மவினையில் இருந்து மீள வேண்டுமா னால், அவன் முதலில் அலைபாயும் நிலையில் இருந்து விடுபட வேண்டும்.
அதற்கு விரதம், அனுஷ்டானம், ஆச்சாரம், தர்மசிந்தனை, செயல்பாடுகள் வேண்டும். இவை இருந்தால் முக்தி கிடைக்கும்.

அது கிடைக்க ஒரே இறைவழிபாடு ஐயப்பனே. ஒருவர் சபரிமலைக்கு மாலைபோடும் போது இல்லற துறவை மேற்கொள்கிறார். உடல், பொருள், ஆவி அனைத்தும் ஐயனுக்கே என்று அர்ப்பணிக்க வேண்டும்.


மாலை போட்ட பிறகு எல்லா ஐயப்ப மார்களும் ஒன்றே. அங்கே ஆத்மா ஒன்றே. வேறுபாடு கிடையாது. விருப்பு, வெறுப்பு கிடையாது.

ஐயப்பனுக்காக மாலை போட்டதும், எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். நான் எனது என்ற பற்று இங்கே அறுபடுகிறது. ஐயப்பனுக்கு விரதம் முக்கியம். 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு போக முடியாதவர்கள், 14 நாட்கள் விரதம் எடுத்து பக்கத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று சென்று வணங்கி வரலாம்.

ஒருவன் பிரமச்சாரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். அனைத்து தோஷங்களுக்கும், ராகு தோஷத்திற்கும் ஐயப்பன் தரிசனம் தான் பரிகாரமாகும்.

இந்து மதத்தில் சைவம், வைணவம் என்று பிரிந்து தனித்து வழிபாடு செய்து வருகிறார்கள். மகாவிஷ்ணு மாதாவாகவும், சிவன் பிதாவாகவும் இருந்து பிறந்தவன் தான் ஐயப்பன்.


பிறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ, இறப்பில் எப்படி வேறுபாடு இல்லையோ அப்படியே ஐயப்ப பக்தர்களிடம் உடையில் வேறுபாடு இல்லை. பாவத்தில், ரூபத்தில் வேறுபாடு இல்லாமல் வணங்கக் கூடிய ஒரே கடவுள் ஐயப்பன் தான்.

சபரிமலையில் உள்ள பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *