டேவிஸ் கோப்பைக்கான அறிமுக வீரராக சேர்க்கப்பட்ட இந்திய அணியில் மனாஸ் தாம்னே !!

புதுடெல்லி:
டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் மனாஸ் தாம்னே அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் தகுதி சுற்று 2-ல் இந்திய அணி, தென் கொரியாவுடன் மோத உள்ளது. இந்த ஆட்டம் வரும் செப்டம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் சியோல் நகரில் நடைபெறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நெதர்லாந்து அணிக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்திருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் அறிமுக வீரராக மனாஸ் தாம்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகத் தரவரிசையில் 362-வது இடத்திலும் இந்திய வீரர்களில் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்திலும் உள்ள 19 வயதாகும் மனாஸ் தாம்னே டேவிஸ் கோப்பை தொடருக்கான அணியில் சுமித் நாகல் (தரவரிசை 235), தக்‌ஷிணேஸ்வர் சுரேஷ் (தரவரிசை 393) ஆகிய அனுபவமிக்க வீரர்களுடன் இணைந்துள்ளார்.

இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி (தரவரிசை 28), ராம் பாலாஜி (தரவரிசை 57) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மாற்று வீரர்களாக சித்தார்த் ராவத், அர்னவ் பாப்பர்கர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *