முதல்​வரின் உத்​தர​வுப்​படி மெரினா கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி!!

சென்னை:
சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வரின் உத்​தர​வுப்​படி சென்​னை​யில் மக்​கள் அதி​கம் வந்து செல்​லும் கடற்​கரை பகு​தி​கள், விளை​யாட்​டுத் திடல்​கள், பூங்​காக்​களில் மக்​கள் தங்​குதடை​யின்றி இணைய பயன்​பாட்டை மேற்​கொள்​ளும் வித​மாக உயர்​தரத்​தில் இலவச வைஃபை வசதி வழங்​கு​வதற்​கான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன.

அதன்​படி முதல்​கட்​ட​மாக மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட மெரினா கடற்​கரை பகு​தி​யில் உழைப்​பாளர் சிலை முதல் கலங்​கரை விளக்​கம் வரை 27 இடங்​களி​லும், பெசன்ட் நகர் கடற்​கரை பகு​தி​யில் 5 இடங்​களி​லும், தலை​மைச் செயலக பூங்​கா​வில் 12 இடங்​களி​லும் என மொத்​தம் 44 இடங்​களில் திங்கட்கிழமை முதல் இலவச வைஃபை வசதி பயன்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

இந்த சேவையை பயன்​படுத்த பொது​மக்​கள் தங்​களது செல்​போனில் வைஃபையை ஆன் செய்​து, ஆங்​காங்கே வைக்​கப்​பட்​டுள்ள க்யூ-ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்​டும்.

அதன் மூலம் வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்து வைஃபை வசதியை பெற்​றுக்​கொள்​ளலாம். மக்​கள் இதனை இலவச​மாக பயன்​படுத்​திக் கொள்​ளலாம். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *