காங்கோ நாட்​டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2 ஆயிரம்; இது​வரை 4,300-க்​கும் மேற்​பட்​டோர் பாதிப்பு!!

கின்ஷாசா:
காங்கோ நாட்​டில் பரவி வரும் எபோலோ வைரஸ் பாதிப்​பில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 2 ஆயிர​த்தைக் கடந்​துள்​ளது. இது​வரை 4,300-க்​கும் மேற்​பட்​டோர் பாதிக்கப்பட்டுள்​ளனர்.

ஆப்​ரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலா வைரஸ் தீவிர​மாக பரவி வரு​கிறது.

அரி​தான பண்​டிபுக்யோ வகை எபோலா வைரஸ் காரண​மாக இந்​தப் பாதிப்பு ஏற்​பட்​டுள்ள நிலை​யில், முந்​தைய எபோலா பாதிப்​பு​களை​விட இது மிக வேகமாகப் பரவி வரு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

நேற்று வெளி​யிடப்​பட்ட அரசு தரவு​களின்​படி, இது​வரை 4,381 பேருக்கு எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதில், 2,011 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

மேலும், 704 பேர் மருத்​து​வ​மனை​களில் அனு​ம​திக்​கப்​பட்டு தனிமைப்​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

இந்த எபோலா பாதிப்பு மே 15-ம் தேதி அதி​காரபூர்​வ​மாக அறிவிக்கப்​பட்​டது. தற்​போது, இது வரலாற்​றிலேயே வேகமாகப் பரவி வரும் எபோலா பாதிப்​பாக மாறி​யுள்​ளது. கடந்த மே மாதத்தில் எபோலா பாதிப்பு உறுதி செய்​யப்​பட்​ட​தாக உலக சுகாதார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

முதல் ஆயிரம் உயி​ரிழப்​பு​களை எட்​டு​வதற்கு சுமார் 9 வாரங்​கள் ஆன நிலை​யில், அடுத்த ஆயிரம் உயி​ரிழப்​பு​கள் ஏற்பட சுமார் 3 வாரங்​கள் மட்​டுமே ஆகி​யுள்​ளது.

இந்​தப் பாதிப்பு உண்​மை​யில் பிப்​ர​வரி மாதத்​திலேயே தொடங்​கிய​தாக​வும், அதி​காரப்​பூர்வமாக கண்​டறியப்​படு​வதற்கு பல மாதங்​களுக்கு முன்பே வைரஸ்பரவத் தொடங்​கிய​தாக​வும் உலக சுகா​தார அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *