கோவை,
முதுகுதண்டு பலம், மன அமைதி பெற ஈஷாவின் இலவச யோகா வகுப்பு ‘உயிர்நோக்கம்’:
மிஸ்டு கால் மூலம் பதிவு செய்யலாம்!
ஈஷா அறக்கட்டளை சார்பில், தமிழ் மக்களுக்காகவே சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘உயிர்நோக்கம்’ எனும் 3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடைபெறுகிறது.
இந்த இலவச யோகா வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ‘83000 99555’ என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சியில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி மற்றும் ஈஷா கிரியா எனும் 3 யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன.
3 நாட்கள் நடைபெறும் இந்த ஆன்லைன் யோக வகுப்பில், தினமும் 2 மணி நேரம் பங்கேற்றால் போதுமானது.
சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ள இப்பயிற்சி நமது உடல், மனம், உணர்ச்சிகள், சக்திகள் மற்றும் நமக்குள் இருக்கும் பஞ்ச பூதங்களை நமது நல்வாழ்வை நோக்கி செயல்பட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இப்பயிற்சியில் கற்றுத்தரப்படும் ‘யோக நமஸ்காரம்’ முழு உடலுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக முதுகுதண்டை பாதுகாத்து புத்துணர்வாக்குகிறது.
மேலும், முதுகுத்தண்டின் அடிப்பகுதியை சுறுசுறுப்பாகவும் சீராகவும் செயல்பட வைப்பதுடன், வயதாகும் வேகத்தை குறைத்து உடலை இளமையுடன் வைக்கவும் உதவுகிறது.
‘நாடி சுத்தி’ பயிற்சி நம் உடலில் பிராண சக்தி பாயும் பாதைகளான நாடிகளைத் தூய்மைப்படுத்துகிறது.
இதன்மூலம் சிறந்த உடலமைப்பையும் உளவியல் நல்வாழ்வையும் பெற முடியும்.
மேலும் ‘ஈஷா கிரியா’ எனும் 12 நிமிட தியானம் ஆரோக்கியம், உயிரோட்டம், அமைதி மற்றும் நல்வாழ்வை கொண்டுவர உதவும் என்பதோடு, நவீன வாழ்க்கையின் பரபரப்பை சமாளிக்க இது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
இப்பயிற்சி குறித்து சத்குரு கூறுகையில், “உயிர்நோக்கம் என்றால் உயிரின் நோக்கத்திற்கு நாம் மாறுவது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளிலிருந்து, உங்களுள் உள்ள உயிரின் நோக்கத்திற்கு நீங்கள் மாறினால், நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையின் இயக்குனராக இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைவரும் தங்களின் வீடுகளிலிருந்தே ஆன்லைனில் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் 83000 99555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். மிஸ்டு கால் கொடுத்தவுடன், அடுத்த கட்ட சேர்க்கை வழிகாட்டுதல்கள் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இணையதள முகவரி
மேலும், isha.co/uyirnokkam என்ற இணையதள முகவரி மூலமாகவும் நேரடியாகப் பதிவு செய்து இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.