மாணவர்​களுக்கு போராடும் உரிமை உள்​ளது, அவர்​களை பார் கவுன்​சிலால் தடுக்க முடி​யாது!! உச்ச நீதிமன்றம் கருத்து…

புதுடெல்லி:
ஹைதரா​பாத்​தில் உள்ள தேசிய சட்​டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்​டமளிப்பு விழாவுக்​கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைக்​கப்​படு​வதற்கு மாணவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்து துணை வேந்​தருக்கு கடிதம் எழு​தினர்.

இந்​நிலை​யில், இது​போன்ற நடவடிக்​கை​களில் மாணவர்​கள் இறங்கி​னால், அவர்​கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்ய முடி​யாது என்​று, இந்​திய பார் கவுன்​சிலின் தலை​வரும், பாஜக எம்​.பி.​யு​மான மன்​னன் குமார் மிஸ்ரா எச்​சரிக்கை விடுத்​ததோடு, தேசிய சட்​டப் படிப்பு மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் 2026-ம் ஆண்டு மாணவர்களை மாநில பார் கவுன்​சிலில் வழக்​கறிஞர்​களாக பதிவு செய்ய கூடாது என்று ஒரு சுற்​றறிக்​கை​யும் அனுப்​பி​னார்.

இது பெரும் சர்ச்​சை​யாக மாறிய நிலை​யில், பார் கவுன்​சில் அனுப்பிய சுற்​றறிக்கை திரும்​பப் பெறப்​பட்​டது.

இதனையடுத்​து, இந்த விவ​காரம் குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மூத்த வழக்​கறிஞர் பரமேஷ்வர் மற்​றும் வழக்​கறிஞர்​கள் முறை​யீடு செய்​தனர்.

அப்​போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், இது மாணவர்​களுக்​கும் தனக்​கு​மான விவ​காரம் என்​றும், இதில் இந்​திய பார் கவுன்​சின் ஏன் தலை​யிட்​டது? என கேள்வி எழுப்​பி​னார்.

அவர் மேலும் கூறிய​தாவது: மாணவர்​களுக்கு போராடும் உரிமை உள்​ளது, அவர்​களை பார் கவுன்​சிலால் தடுக்க முடி​யாது.

நான் மாணவ​னாக இருந்த போதும் மாணவர்​கள் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளேன். ஜனநாயக முறை​யில் அமை​தி​யாக போராடும் மாணவர்​களை அனு​ம​திக்க வேண்​டும்.

பார் கவுன்​சிலோ, வேறு அமைப்​பு​களோ இதில் தலை​யிட தேவை இல்​லை. மாணவர்​கள் நேரடி​யாக எனக்கு கடிதம் எழுதலாம்.

தேசிய சட்​டப் படிப்பு மாணவர்​கள் தங்​கள் படிப்பை முடித்து விரை​வில் வழக்​கறிஞ​ராக பதிவு செய்ய வேண்​டும். அவர்​களை உடனடி​யாக சட்ட உதவி மையத்​தில் பணி அமர்த்த தயா​ராக உள்​ளேன்.

இவ்​வாறு தெரி​வித்த தலைமை நீதிப​தி, பார் கவுன்​சில் வெளி​யிட்ட சுற்​றறிக்கை குறித்து விளக்​கம்​ அளிக்​க இந்​தி​ய பார்​ கவுன்​சிலுக்​கு நோட்​டீஸ்​ பிறப்​பித்​து உத்​தர​விட்​டார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *