சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்; திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து!!

சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் விஜய் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.

தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *