அனைத்து அமைச்​சர்​களும் ‘வாங்க’ தொடங்கிவிட்டார்​கள்; இதுதொடர்​பான பட்​டியல் எங்​களிடம் இருக்​கிறது, விரை​வில் வெளி​யிடு​வோம்!! நயினார் நாகேந்திரன் விமர்சனம்….

தூத்துக்குடி:
அனைத்து அமைச்​சர்​களும் ‘வாங்க’ தொடங்கிவிட்டார்​கள். இதுதொடர்​பான பட்​டியல் எங்​களிடம் இருக்​கிறது, விரை​வில் வெளி​யிடு​வோம் என தமிழக பாஜக தலைவர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக, கர்​நாடக மாநில நிர்​வாகத்​தில் தமிழகம் தலை​யிடக் கூடாது என அம்​மாநில முதல்​வர் கூறி​யிருக்​கிறார்.

யாராக இருந்​தா​லும் அவர்​களை சுட்​டுக் கொல்ல, ஒரு உயிரைப் பறிக்க யாருக்​கும் உரிமை கிடை​யாது. அவருக்கு கடுமை​யான கண்​டனத்தை தெரி​வித்து கொள்​கிறோம்.

அனைத்து அமைச்​சர்​களும் வேலையை தொடங்கி விட்​டார்​கள். வேலையை தொடங்​கி​விட்​டார்​கள் என்​றால் அதற்​கான அர்த்​தம் உங்​களுக்கு தெரி​யும்.

எல்​லோருமே வாங்​கத் தொடங்கி விட்​டார்​கள். யார், யார் எங்கே வாங்​கு​கிறார்​கள், எல்லா லிஸ்ட்​டும் எங்​கள் கையில் இருக்​கிறது. எல்லா விஷ​யத்​தை​யும் வெகு

விரை​வில் வெளி​யிடு​வோம். தவெக அரசின் நூறு நாள் என்​பது மக்​களுக்​கான வேதனை​யான நாட்​களாகத் தான் கருதுகிறேன். எல்லா விஷ​யங்​களை​யும் தொடங்கி விட்​டார்​கள்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *