2 ஆண்​டு​களில் பறக்​கும் ரயில் வழித்​தடத்​தி​லும் ‘மெட்​ரோ’வுக்கு இணை​யான வசதி​கள் கிடைக்​கும் !!

சென்னை:
பறக்​கும் ரயில் வழித்​தடத்தை மெட்​ரோவுடன் இணைக்க ரயில்வே அமைச்​சகம் இறுதி ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதன்​படி, 2 ஆண்​டு​களில் பறக்​கும் ரயில் வழித்​தடத்​தி​லும் ‘மெட்​ரோ’வுக்கு இணை​யான வசதி​கள் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பறக்​கும் ரயில் வழித்​தடத்தை (எம்​ஆர்​டிஎஸ்) சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைக்கும் முன்​மொழி​வுக்கு ரயில்வே அமைச்​சகம் இறு​தி​ ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதற்​கான அதி​காரப்​பூர்வ வரைவு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் தெற்கு ரயில்வே-தமிழக அரசு இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது.

தெற்கு ரயில்​வே​யின் கட்​டுப்​பாட்​டின்​ கீழ், பறக்​கும் ரயில் வழித்​தடம் 1997-ம் ஆண்டு முதல் பயன்​பாட்​டில் இருக்​கிறது.

சென்​னை​யில் கடற்​கரை – வேளச்​சேரி இடை​யில் 19 கி.மீ. தொலை​வுக்கு பறக்​கும் ரயில் சேவை இயங்​கியது.

அதன் ​பிறகு, வேளச்​சேரி – பரங்​கிமலை வரை நீட்​டிப்பு செய்​யப்​பட்​டு, இத்​தடம் நடப்​பாண்​டில் மார்ச் 15-ம் தேதி முதல் பயன்​பாட்​டுக்கு வந்​தது.

தற்​போது இந்த தடத்​தில் 23.98 கி.மீ. தொலை​வுக்கு மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் நாள்​தோறும் சுமார் ஒரு லட்​சம் பேர் பயணிக்​கின்​றனர்.

இதற்​கிடையே, பறக்​கும் ரயில் திட்​டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்க வேண்​டும் என கோரிக்கை எழுந்​தது.

அதன்​படி, பறக்​கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிர்​வாகத்​திடம் இணைக்​கும் திட்​டத்​துக்கு ரயில்வே வாரி​யம் கடந்த 2025 ஜூலை 31-ல் முதல்கட்ட (கொள்கை அளவில்) ஒப்புதலை வழங்​கியது.

இந்​நிலை​யில், பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைப்​ப​தற்​கான முன்​மொழி​வுக்கு ரயில்வே அமைச்​சகம் இறு​தி​யாக ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இதற்​கான அதி​காரப்​பூர்வ வரைவு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் தெற்கு ரயில்வே – தமிழக அரசு இடையே கையெழுத்​தாகி​யுள்​ளது.

அதன்​படி, தெற்கு ரயில்வே தனது சொத்​துகள் மற்​றும் பொது​வான செயல்​பாடு​கள் மற்​றும் பராமரிப்​புப் பணி​களை (முக்​கிய ரயில் இயக்​கம் மற்​றும் பராமரிப்​புப் பணி​களைத் தவிர்த்​து) 90 நாட்​களுக்​குள் ஒப்​படைக்​கும்.

மேலும், இரண்டு ஆண்​டு​கள் கொண்ட மாறு​தல் காலத்​துக்​குள் (transition period) முழு ரயில் இயக்​க​மும் மெட்ரோ ரயில் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்​கப்​படும்.

இந்த 2 ஆண்டு காலத்​தில், மாநில அரசு ஒப்​புக்​கொள்​ளப்​பட்ட தொகையை முழு​மை​யாகவோ, தவணை முறை​யிலோ செலுத்த வேண்​டும்.

2 ஆண்​டு​களில் பறக்​கும் ரயில் வழித்​தடத்​தி​லும் ‘மெட்​ரோ’வுக்கு இணை​யாக, சர்​வ​தேச தரத்​திலான வசதி​கள் கிடைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

புதுப்​பொலிவுடன் மாறுகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறும்​போது, “பறக்​கும் ரயில் வழித்​தடத்​தில் மேற்​கொள்​ளப்பட உள்ள பல்​வேறு வசதி​கள் தொடர்​பாக விரி​வான திட்ட அறிக்கை மாநில அரசு மூல​மாக மத்​திய அரசுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அடுத்த 2 ஆண்​டு​களுக்கு தெற்கு ரயில்வே நிர்​வாகமே ரயில்​களை இயக்​கும். அதற்​குள் ஏசி ரயில் இயக்​கம், பார்க்​கிங் வசதி, சிசிடிவி கேம​ராக்​கள் நிறு​வுதல், நகரும் படிக்​கட்​டு, மின்​தூக்கி வசதி என அனைத்து வசதி​களும் கொண்டு வரப்​படும். அதன்​பிறகு, இத்​தடம் புதுப்​பொலிவுடன் மாறும்” என்​றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *