சென்னை:
தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் குரலை இழக்கும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் பங்கேற்றுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: எனது முதல் கருத்து, மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் தென் இந்தியா அரசியல் குரலை இழக்கும்.
இந்திரா காந்தி ஆட்சியிலும், தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.
மக்கள்தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம். மக்களவையில் தென் மாநிலங்களுக்கு 33% இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கூறினார்.