தமிழகத்தில் இருந்து சென்ற 36 பேரின் நிலை என்ன? 

காத்மாண்டு: 

காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில், தமிழகத்தில் இருந்து சென்று வெள்ளத்தில் சிக்கி மாயமான 36 பேரின் புகைப்படம், அடையாளம், ஆவணங்களை கொண்டு தேடும் பணி 4வது நாளாக தொடர்கிறது. ஆனால், அவர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் ஏரி உடைப்பால் நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஆக.26-ம் தேதி திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் சிக்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டு அதிகாரிகள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கினர்.

இதில் கும்பகோணத்தில் இருந்து நேபாளத்துக்கு சுற்றுலா சென்றபோது வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 21 பேர் சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் இன்று 4-வது நாளாக வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடும் பணி தொடங்கியது.

மேலும் கும்பகோணத்திலிருந்து சென்ற யாத்ரா நிறுவன உரிமையாளரின் உறவினர் உசேன் மற்றும் அங்கு சிக்கிக் கொண்டவர்களின் உறவினர்கள் சிலர் காத்மாண்டுக்கு சென்று, அங்குள்ள மருத்துவமனைகளில் தமிழகத்தில் இருந்து சென்ற 36 பேரின் புகைப்படம், அடையாளம், ஆவணங்களை கொண்டு பரிதாபமான நிலையில் தேடி வருகின்றனர்.

ஆனால் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 36 பேர் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என யாத்ரா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *