ரஜினி​காந்த் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘தர்​மன்’ படப்பிடிப்பு அக்டோபரில் நிறைவு: இயக்குநர் தகவல்!!

சென்னை:
ரஜினி​காந்த் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘தர்​மன்’ படத்தை அஸ்​வத் மாரி​முத்து இயக்கி வரு​கிறார்.

இதில் சிம்​ரன், ராஷி கன்​னா, யோகி​பாபு உள்பட பலர் நடிக்​கின்​றனர். அனிருத் இசை அமைக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு அக்​டோபர் மாதத்​துக்​குள் நிறைவடை​யும் என்று அஸ்​வத்மாரி​முத்து தெரி​வித்​துள்​ளார்.

நிகழ்ச்சி ஒன்​றில் பேசிய அவர், ‘‘தர்​மன் படத்​தின் 2 கட்​டப்​ படப்​பிடிப்பு நிறைவடைந்​து​விட்​டது.

ரஜினி​காந்த் இன்​றைய ‘ஜென்​-ஸி’ தலை​முறை​யினருக்கு ஏற்ற துடிப்​பான மனநிலை​யில் இருக்​கிறார்; இப்​படம் அனை​வரை​யும் கவரும் வகை​யில் இருக்​கும். ரஜினி சார் போன்ற இனிமை​யான மனிதரைப் பார்த்​ததே இல்​லை.

அவர் ஓர் அற்​புத​மானவர். நான் அவர் அரு​கில் செல்​லும் ​போதெல்லாம் அவர் எழுந்து நிற்​கிறார்.

அதற்​கான காரணத்​தைக் கேட்​ட​போது, ‘இது கலைக்​கும் இயக்​குநருக்​கும் நான் அளிக்​கும் மரி​யாதை’ என்​றார்” என அஸ்​வத் மாரி​முத்து கூறி​யுள்​ளார்.

சிலம்​பரசனுடன் இணைய இருக்​கும் படத்​தின் படப்​பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் தொடங்​கும் என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *