சென்னை:
சான் இபோர்ஸ் ஆதரவுடன் கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான ஆடவருக்கான ‘டான் டூ டஸ்க்’ வாலிபால் சாம்பியன்ஷிப் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
ஒருநாள் மட்டும் நடைபெற்ற இந்தத் தொடரில் 19 அணிகள் கலந்துகொண்டன. இரவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் லயோலா கல்லூரி 25-18, 25-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத் தலைவர் டாக்டர் பொன். கவுதம சிகாமணி, வாழ்நாள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, பொதுச் செயலாளர் ஏ.ஜே. மார்ட்டின் சுதாகர், வேலூர் மாவட்ட வாலிபால் சங்கத் தலைவர் என்.வி. தியாகச்சந்தன், காஸ்கோ இந்தியா நிறுவனத்தின் மண்டல விற்பனை அதிகாரி முகமது ஹசன், போட்டிக் குழு ஆலோசகர் ஏ.தினகர், ஒருங்கிணைப்பாளர் பி. ஜெகதீசன், சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் இயக்குநர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.கேசவன், இணைச் செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.