நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ சிறப்புக் குழு: தமிழக அரசு!!

சென்னை:
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அறிய காத்மாண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நேபாளத்துக்கு சுற்றுலா சென்றபோது, 26 ஆகஸ்ட் 2026 அன்று போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனதாகவோ அல்லது சிக்கித் தவிப்பதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை, தமிழ்நாட்டை சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு, புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இன்னும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 பயணிகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சில விவரங்களை https://udb. nepalpolice. gov.np/disaster என்ற தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேபாள காவல்துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான விவரங்களை அறிய புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையை, 92895 16712 (Whatsapp / Call), 98685 30776 (Mobile No.) என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது தொடர்பாக நேபாளத்துக்குச் செல்லும் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள் ளவும் முதல்வர் விஜய்யின் உத்தரவின்பேரில், தமிழ்நாடு அரசின் மூன்று அலுவலர்கள் கொண்ட குழு காத்மண்டுவில் முகாமிட்டுள்ளது.

ஏ. சத்திய சிவம் (Mob No. 9868207259), பி. தினேஷ் கண்ணன் (Mob No. 9868530799), எஸ். அஜய் (Mob No. 9868224049) ஆகிய மூன்று அலுவலர்கள் காத்மாண்டுவிலிருந்து தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள்.

முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், நேபாள அரசு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் காட்மண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, சாத்தியமான அனைத்து வழிகளிலும் இடைவிடாது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்,” என்று தமிழக அரசின் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *