கப்பல் கட்டும் துறையில் 2030-ம் ஆண்டில் உலகின் சிறந்த 10 நாடுகளில் இந்தியா நிச்சயம் இடம்பெறும் – மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழித் துறை அமைச்​சர் சர்பானந்தா சோனோவால்!!

தூத்துக்குடி:
கப்​பல் கட்​டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் உலகில் சிறந்த 10 நாடு​களுக்​குள் இந்​தியா இடம் பிடிக்​கும் என்று மத்​திய துறை​முகங்​கள், கப்​பல் போக்​கு​வரத்து மற்​றும் நீர்​வழித் துறை அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் கூறி​னார்.

தூத்​துக்​குடி வஉசி துறை​முகத்​தில் மொத்​தம் ரூ.303 கோடி​யில் பசுமை ஹைட்​ரஜன் முன்​னோடி ஆலை தொடக்க விழா மற்​றும் பல்​வேறு திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்டு விழா நேற்று நடை​பெற்​றது.

துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித் தலைமை வகித்​தார். தமிழக அமைச்​சர் பி.கீ​தாஜீவன், தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் முன்​னிலை வகித்​தனர்.

மத்​திய அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் முடிவுற்ற திட்​டப் பணி​களை தொடங்​கி​வைத்​தும், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும் பேசி​னார்.

விழா​வில், மத்​திய துறை​முகங்​கள் துறைச் செயலர் டி.கே.​ராமச்​சந்​திரன், சிறப்​புச் செயலர் ராஜேஷ் குமார் சின்​கா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.

விழா​வில் மத்​திய அமைச்​சர் சர்​பானந்தா சோனோ​வால் பேசி​ய​தாவது: கடந்த 11 ஆண்​டு​களில் தமிழகத்​தில் உள்ள 3 பெரிய துறை​முகங்​களுக்கு சாகர் மாலா திட்​டத்​தின் கீழ் ரூ,93,715 கோடியி​லான 98 திட்​டங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இதில் 50 திட்​டங்​கள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன.

இதுத​விர 3 துறை​முகங்​களை நவீனப்​படுத்த 11 ஆண்​டு​களில் ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. தூத்​துக்​குடி வஉசி துறை​முகம் சூரிய மின்​சக்​தி, காற்​றாலைத் திட்​டங்​கள் மூலம் பசுமை துறை​முக​மாக மாறி​யுள்​ளது.

நாட்​டில் 3 துறை​முகங்​கள் பசுமை ஹைட்​ரஜன் மைய​மாக அறிவிக்​கப்​பட்​டன. அதில் தூத்​துக்​குடி​யும் ஒன்​றாகும்.

தூத்​துக்​குடி துறை​முகத்தை பசுமை ஹைட்​ரஜன் மைய​மாக மாற்​றும் திட்​டத்​தின் முன்​னோடி​யாக, நாட்​டிலேயே முதல் துறை​முக​மாக தூத்​துக்​குடி​யில் பசுமை ஹைட்​ரஜன் உற்​பத்தி முன்​னோடி ஆலை திறக்​கப்​பட்​டுள்​ளது.

அதே​போல், நாட்​டிலேயே முதலா​வ​தாக தூத்​துக்​குடி துறை​முகத்​தில் பசுமை மெத்​த​னால் சேமிப்பு மற்​றும் சுத்​தி​கரிப்பு நிலை​யம் அமைக்​கப்​படு​கிறது. மேலும், தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளம் அமைக்​கப்​பட உள்​ளது.

இதற்​காக தமிழக அரசின் சிப்​காட் நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டுள்​ளது. கப்​பல் கட்​டும் தளம் திட்​டம் தொடர்​பாக மத்​திய மாநில அரசுகளின் கூட்டு நிறு​வனம் விரை​வில் உரு​வாக்​கப்​படும்.

இந்த திட்​டம் மூலம் 2,000 பேருக்கு நேரடி​யாக​வும், 5,000 பேருக்கு மறை​முக​மாக​வும் வேலை​வாய்ப்பு கிடைக்​கும்.

மேலும், கப்​பல் கட்டும் துறை​யில் 2030-ம் ஆண்​டில் இந்​தியா உலகின் 10 சிறந்த நாடு​களில் ஒன்​றாக​வும், 2047-ல் சிறந்த 5 நாடு​களில் ஒன்​றாக​வும் இருக்​கும்.

இந்த திட்​டங்​களில் கடலோர சமு​தாய இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில் 37 கடல்​சார் பயிற்சி நிலை​யங்​கள் மூலம் ஆண்​டுக்கு 3.3 லட்​சம் பேருக்கு திறன் மேம்​பாட்டு பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

அமெரிக்க வரி​வி​திப்பை சமாளிக்​கும் வகை​யில் வலு​வான சூழல் நம்​மிடம் உள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் பேசி​னார்.

புரிந்​துணர்வு ஒப்​பந்​தம்: முன்​ன​தாக, தூத்​துக்​குடி​யில் கப்​பல் கட்​டும் தளம் அமைப்​பது தொடர்​பாக வஉசி துறை​முக ஆணை​யம், சிப்​காட் நிறு​வனம் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

துறை​முக ஆணை​யத் தலை​வர் சுசாந்த குமார் புரோஹித், சிப்​காட் மேலாண் இயக்​குநர் செந்​தில்​ராஜ் ஆகியோர்​ ஒப்​பந்​த நகலை பரி​மாறிக்​ கொண்​டனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *