நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு!!

சென்னை:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கைல், “நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத் தில் செப்.3 ( நேற்று) மாலை, கல்லூரியில் பயின்று வரும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுபிதா ( 19) என்ற மாணவி பள்ளியில் பயின்றுவரும் தனது சகோதரிகளான நிவேதா ( 17), தனுஸ்ரீ ( 13) மற்றும் அவர்களது பள்ளி தோழி அபிநயா (12), ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்லும்போது, தனியார் கல்லூரிப் பேருந்தில் மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகியோர் சம்பவ இடத்திலேயும், கல்லூரி மாணவி சுபிதா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி யைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவிகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தின ருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *