மனிதர்களை தாக்கும் விசித்திர விலங்கு!! வைரல் வீடியோ ….!!..

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஒரு மர்ம விலங்கு மக்களைத் தொடர்ந்து தாக்கி வருகிறது.
அமெரிக்காவின். நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை முதல் செப்டம்பர் 1 செவ்வாய்க்கிழமை வரை மட்டும் இத்தகைய மூன்று தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதிலும் குறிப்பாக நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தின் லெபனான் நகரின் சென்டெர்ரா பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரக்-க்கு அருகில் ஓட்டுநரை அந்த விசித்திர விலங்கு பாய்ந்து தாக்கும் வீடியோ அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியாகியுள்ளது.

வீடியோ காட்சிகளின்படி, புல்வெளியில் இருந்து அதிவேகமாக ஓடிவரும் அந்த விலங்கு, நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு அடியில் புகுந்து, அதிலிருந்து இறங்கிய ஓட்டுநரின் மீது திடீரெனப் பாய்கிறது.


அந்த நபர் தன் கையில் இருந்த பையைக் கொண்டு விலங்கை விரட்டவும் முயல்கிறார். ஆனால், பையைப் பிடுங்கி எறியும் அந்த விலங்கு, மீண்டும் பாய்ந்து அவரது கால்களை கவ்விப் பிடிக்கிறது.

கடுமையாகப் போராடி அந்த நபர் விலங்கின் பிடியை உதறித் தள்ளுகிறார். மற்றொரு நபர் உதவிக்கு ஓடிவரும் வேளையில், அந்த விலங்கு மீண்டும் வாகனத்தின் அடியில் புகுந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *