இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுவது தவெக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது; திருமாவ ளவன் கருத்து!!

சிவகாசி:
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுவது தவெக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவாளனன் கூறினார் சிவகாசியில் நேற்று திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கு விசிக பிரச்சாரம் செய்யும். முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முழுமையாக முடிவடையாததால் அதுபற்றி கருத்துகூற முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் வெளியிட்ட வீடியோ பதிவில், மனித மாண்புகளுக்கு மரியாதை வழங்கிப் பேச வேண்டும் என கட்சியினருக்கு வழிகாட்டுவதாகக் கூறி இருந்தார்.

ஆனால், முதல்வரின் பேச்சைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட் டத்தில் ஆ.ராசா எம்பி மற்றும் அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் மாண்புகளை கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை.

அது தவெகவுக்கு மட்டுமல்ல; திமுகவுக்கும் எதிராகத்தான் முடியும். ஆ.ராசா உள்ளிட்ட திமுக முன்னணி நிர்வாகிகளின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது.

கம்யூனிஸ்ட்கள் தொடக்கத்திலேயே ஆட்சிக்கு மட்டும்தான் ஆதரவு; நாங்கள் தனித்தே இயங்குவோம் எனக் கூறி இருந்தனர். இப்போதும் ஆட்சிக்கு எங்கள் ஆதரவு உள்ளதாக தெளிவாகக் கூறி உள்ளனர்.

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அவர்களின் உரிமை. அது தவெக கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என நம்புகிறேன்.

மக்களின் ஒத்திசைவு இன்றி புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *