ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப் புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி!!

புதுடெல்லி:
இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 0, கேப்டன் இப்ராஹிம் ஸத்ரன் 11 ரன்கள் சேர்த்தனர்.

செடிக்குல்லா அடல் 13, குல்பதீன் நயீப் 2, தார்விஷ் ரசூலி 2, ரஷித் கான் 1, முகமது நபி 33 ரன்கள் எடுத்து வீழ்ந்தனர். அஸ்மத்துல்லா ஒமர்ஸாய் 44 பந்துகளில் 64 ரன்களும், முஜீப்உர் ரஹ்மான் 9 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3, ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். சஞ்சு சாம்சன் 10 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து களத்துக்கு வந்த இஷான் கிஷன் உடன் இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அபிஷேக். 32 பந்துகளில் 82 ரன்களை அவர் விளாசி இருந்தார்.

அவரது இன்னிங்ஸில் தலா 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இஷான் கிஷன், 33 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 8 மற்றும் திலக் வர்மா 3 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *