தேனி,
தேனி மாவட்டம் கடமலை குண்டு மலைப்பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்கிலி கரடு பகுதியில் கண்டறியப்பட்ட ஓவியங்களில் மனித உருவங்கள், வேட்டை காட்சிகள் மற்றும் சடங்கு நிகழ்வுகளை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இரும்பு உருக்கு எச்சங்கள், சுடுமண் குழாய்கள் உளிட்ட தொல்பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனவே பகுதியில் முழுமையான தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.