திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை!!

திருச்சி:
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவராக இருந்த பி டி அரசகுமார் என்பவர் தனது செல்வாக் கை பயன்படுத்தி தனியார் பள்ளிகளிடமிருந்து சுமார் 100 கோடி வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் கடந்த ஜூலை கைது செய்யப்பட்டார்.

இதில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனை நடப்பது தெரிந்து முன்னாள் அமைச்சர் மகேஸின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டனர்.

தொடர்ந்து அவருக்கு ஆதரவாக திமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் கே.என்.நேரு அவரது வீட்டுக்கு வந்தார் ஆனால் போலீஸார் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

இது குறித்து கே.என்.நேரு செய்தியாளர்களிடம், “திமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட அமைச்சர்கள் இதுபோன்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கட்டாயமாக இது தமிழக வெற்றி கழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. சோதனை நடைபெறுவதால் அதற்கு பிறகு என்னை வந்து சந்திக்கிறேன் என மகேஸ் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு சென்று குற்றமற்றவர்கள் என நிரூபித்து வெளி வருவோம்,” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *