ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் 4,179 வார்டுகளில் பாஜக வெற்றி!!

புதுடெல்லி:
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்​தில் மொத்​தம் 10 மாநக​ராட்​சிகள், 51 நகராட்சி மன்​றங்​கள் மற்​றும் 248 நகராட்சிகளுக்​கான தேர்​தல்​கள் 2 கட்​டங்​களாக நடை​பெற்​றன.

செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு கட்ட தேர்தலிலும் மொத்தம் 74.05% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

இவற்​றில், பாஜக​வுக்கு 4,179 மற்​றும் காங்​கிரஸுக்கு 3,613 வார்டுகள் கிடைத்​துள்​ளன. ஜெய்​பூர், கோட்​டா, உதய்​பூர் மற்​றும் பில்​வா​ரா​வில் பாஜக​வினர் அதி​கம் வெற்றி பெற்​றுள்​ளனர்.

காங்கிரஸுக்கு அஜ்மீர், பிக்​கானேர் மற்​றும் பாலி​யில் அதிக வார்டு​கள் கிடைத்​துள்​ளன.

சுயேச்​சைகள் மற்​றும் இதர கட்சியினருக்கு 2,436 வார்​டு​களில் வெற்றி கிடைத்​துள்​ளது.

உ.பி. முன்​னாள் முதல்​வர் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் கட்​சி​யின் 19 பேர் வெற்றி பெற்​றுள்​ளனர்.

பாஜக முதல்​வர் பஜன்லால் தலை​மையி​லான அரசின் 20 மாத கால ஆட்​சிக்​கான சோதனை​யாக இந்​தத் தேர்​தல் கருதப்​பட்​டது.

இதன் முடிவு​களில், முதல்​வர் பஜன்லால் அரசு வெற்றி பெற்றுள்ளதையே தேர்​தல் முடிவு​கள் உணர்த்​துகின்​றன. பாஜகவின் பல முக்​கி​யத் தலை​வர்​களால் தங்​கள் வார்​டு​களில் வெற்​றி பெற முடிய​வில்​லை.

மத்​திய அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத்​தின் வார்​டில் பாஜக தோல்​வியைச் சந்​தித்​தது. முன்​னாள் முதல்​வர் வசுந்​தரா ராஜேவின் கோட்​டை​யாகக் கருதப்​படும் ஜலா​வாரில் பாஜக​வால் பெரும்​பான்​மை​யைப் பெற முடிய​வில்​லை.

முதல்​வர் பஜன்​லால் சர்​மா​வின் மாவட்​ட​மான பரத்​பூர் மாநக​ராட்​சி​யிலும் பாஜக​வால் பெரும்​பான்​மை​யைப் பெற முடிய​வில்​லை.

பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்​தோடின் கோட்​டை​யான பாலி​யிலும் பாஜக தோல்​வியைச் சந்​தித்​தது.

இதே​போல், ராஜஸ்​தான் முன்​னாள் முதல்​வரும் மூத்த காங்​கிரஸ் தலை​வரு​மான அசோக் கெலாட் வசிக்​கும் வார்​டில் காங்​கிரஸ் தோல்​வியைச் சந்​தித்​துள்​ளது.

கெலாட் வசிக்கும் வார்​டில் பாஜக வெற்றி பெற்​றது ஒரு முக்​கி​யத் திருப்​பமாகும்.

காங்​கிரஸின் முன்னாள் மத்​திய அமைச்​ச​ரான சச்​சின் பைலட் வசிக்​கும் ஜெய்ப்பூர் மாநக​ராட்​சி​யின் 97-வது வார்​டிலும் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது.

இருப்​பினும், பைலட்​டின் தொகு​தி​யான டோங்​கில் காங்​கிரஸ் அமோக வெற்றிபெற்​றுள்​ளது.

இம்​முறை தேர்​தலில் 21-22 வயதுள்ள ஜென் இசட் ஆதிக்​கம் செலுத்​தி​யுள்​ளனர்.

ஜெய்ப்​பூர் முதல் அல்​வார் வரை பல்​வேறு வார்​டு​களில் இளம் வயதினர் அமோக வெற்றி பெற்​றுள்​ளனர்.

பாஜக​வின் 21 வயது வேட்​பாளர் நேஹா சர்​மா, அல்​வரின் தானாகளி வார்​டில் வெற்றி பெற்​றுள்​ளார்​.

காங்​கிரஸின்​ 22 வயது பைஜ் அகமது ஜெய்​பூர்​ 71-வது வார்​டில்​ பெற்​றி பெற்​றுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *