விநாயகர் சதுர்த்தியை முன்​னிட்​டு ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் விலையில் தங்க மோதகம் இனிப்பு – மகாராஷ்டிர கடையில் விற்பனை!!

நாசிக்:
விநாயகர் சதுர்த்தியை முன்​னிட்​டு, நாசிக்​கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் கடை தங்க மோதகம் இனிப்பை விற்பனை செய்து வருகிறது.

இதன் விலை ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் ஆகும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்​னிட்​டு, மகா​ராஷ்டிர மாநிலம், நாசிக்​கில் உள்ள சாகர் ஸ்வீட்ஸ் கடை, ஆண்​டு​தோறும் தங்க மோதகங்​களை தயாரித்து அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

இந்த ஆண்​டும் தங்க மோதகத்தை சாகர் ஸ்வீட்ஸ் அறிமுகப்படுத்தி​யது. இதன் ஒரு கிலோ விலை ரூ.27 ஆயிரம். உண்​ணக்​கூடிய தங்க முலாம் பூசப்​பட்ட இந்த இனிப்​பு, சமூக வலை​தளங்​களில் வைரலா்னது.

இந்​தக் ​கடை, கடந்த ஆண்​டு, ஒரு கிலோ ரூ.20 ஆயிரத்​துக்​கும், 2021-ம் ஆண்​டில் ஒரு கிலோ ரூ.12 ஆயிரத்​துக்​கும் தங்க மோதகங்​களை விற்பனை செய்தது.

மேலும், உண்​ணக்​கூடிய வெள்ளி முலாம் பூச்​சுடன் தயாரிக் கப்பட்ட வெள்ளி மோதகங்​களை​யும் விற்​பனை செய்​தது.

தங்​கத்​தைப் போல​வே, தங்க மோதகங்​களின் விலை​யும் கடந்த 5 ஆண்​டு​களில் இரு​மடங்​குக்​கும்​ அதி​க​மாக உயர்ந்​துள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *