​குழந்​தையை பெற்​றெடுத்​த 6 ​நாட்​களில்​ பணிக்​கு ​திரும்​பிய கேரள ​மாநில வயநாடு ​மாவட்ட ஆட்சியர்​!!

திருவனந்தபுரம்:
கேரள ​மாநிலம்​ வயநாடு ​மாவட்ட ஆட்சியர்​ குழந்​தையை பெற்​றெடுத்​த 6 ​நாட்​களில்​ பணிக்​கு ​திரும்​பி​னார்​. எனினும்​, பின்​னர்​ 2 ​மாத ​விடுப்​பில்​ சென்​றுள்​ளார்​.

கேரளா​வின்​ வய​நாடு ​ஆட்​சி​யர்​ மே​காஸ்ரீ. 2017-ம்​ ஆண்​டு பேட்ச்​ ஐஏஎஸ்​ அ​தி​காரி​யான அவர்​, கடந்​த ஆகஸ்ட்​ 24-ம்​ தே​தி தனது அலு​வல​க பணி​களை ​முடித்​தார்​.

பிறகு அவர்​ வீட்​டுக்​குச்​ செல்வதற்​குப்​ ப​திலாக நே​ராக மருத்​து​வ​மனை​யில்​ சேர்ந்​து ​கொண்டார்​. மறு​நாள்​, மே​காஸ்ரீ தனது 3-வது பெண்​ குழந்​தையைப்​ பெற்​றெடுத்​தார்​.

அடுத்​த 6 ​நாட்​களுக்​குப்​ பிறகு அவர்​ செப்​டம்​பர்​ 1-ம்​ தே​தி மீண்டும்​ பணிக்​குத்​ ​திரும்​பி​னார்​.

கடந்​த 15 ​நாட்​களாக பணியாற்றிய அவர்​, 2 ​மாத ​கால மகப்​பேறு ​விடுப்​பில்​ சென்றுள்ளார்​.

இதையடுத்​து, நேற்​று அவர்​ தனது பொறுப்​பை தனக்​கு அடுத்​த நிலை​யில்​ உள்​ள அ​தி​காரி செல்​சாசினி​யிடம்​ ஒப்படைத்​தார்​.

​முன்​ன​தாக, செவ்​வாய்க்​கிழமை அவருக்​கு பிரி​யா​விடை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதற்​காக மே​காஸ்ரீ தனது பச்​சிளம்​ குழந்தை உட்​பட 3 பெண்​ குழந்​தைகளை​யும்​ அலு​வல​கத்​துக்​கு அழைத்​து வந்​திருந்​தார்​.

அப்​போது, ​மாவட்​ட ஆட்​சி​யர்​ அலு​வல​கம்​ ஒரு நெகிழ்ச்​சி​யான தருணத்​தைக்​ கண்​டது. அவரது கடமை உணர்​வு ​பா​ராட்​டப்​பட்​டாலும்​, மே​காஸ்ரீ தனது ​முடிவை பெரிதுபடுத்த ​விரும்​ப​வில்லை.

இதுகுறித்​து மே​காஸ்ரீ கூறும்​போது, “பிரசவத்​துக்​குப்​ பிறகும்​ ​மாவட்ட ஆட்​சி​யரின்​ கடமை​களைத்​ தொடர்ந்​து செய்​வது தனிப்பட்​ட ​முடிவு.

மகப்​பேறு ​விடுப்​பு எடுக்​க வேண்​டும்​ என்​பது கட்​டாயமில்​லை. இந்​த ​முடிவு அவர​வர்​ உடல்​நிலை மற்​றும்​ சூழ்நிலை​யைப்​ பொறுத்​தது” என்​றார்​.

சமீபத்​தில்​, மே​காஸ்ரீ​தான்​ வழக்​க​மாக நடத்​தி வந்​த “குட்​ ​மார்​னிங்​ கலெக்​டர்​” ​திட்​டத்​தின்​ ஒரு பகு​தி​யாக கல்​லூரி ​மாணவர்​களு​டன்​ ஆன்​லைன்​ மூலமாகவும்​ உரை​யாடி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *