ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர், அணிப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன்!!

நகோயா:
ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர், அணிப் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் வென்றார்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது.

நேற்று காலை 6 மணிக்கு மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் தகுதி சுற்று மற்றும் அணிகள் பிரிவில் இறுதி சுற்றும் நடைபெற்றது.

அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாளறிவன், சோனம் மஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய அணி 2-வது இடத்தைக் கைப்பற்றி வெள்ளி வென்றது.

இது நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாக அமைந்தது.

இந்திய அணி 1898 புள்ளிகளைப் பெற்றது. சீன அணி 1904.2 புள்ளிகள் பெற்று தங்கமும், ஜப்பான் அணி 1897.1 புள்ளிகளைப் பெற்று வெண்கலமும் வென்றது.

முர்மு, மோடி வாழ்த்து

தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் 252.4 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியை கைப்பற்றினார். ஜப்பான் வீராங்கனை ஹினாதா டைச்சி 253 புள்ளிகளுடன் தங்கமும், கொரியாவின் பேன் ஹியோஜின் 230.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

2 வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *