தமிழகத்தில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாகச் சரி செய்யாமல், குழந்தைக ளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதில் பயனில்லை; பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் !!

சென்னை:
தமிழகத்தில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடி யாகச் சரி செய்யாமல், குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்குவதில் பயனில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தேவைகளை முதலில் கவனியுங்கள் முதல்வர் விஜய்…. குழந்தைகளுக்கு தேவை பால். தங்க மோதிரம் கொடுக்கப் போகிறீர்கள் தரமான பாலுக்கான தட்டுப்பாடை எப்பொழுது சரி செய்யப் போகிறீர்கள். தங்கத்தை விட தரமான பால் தான் குழந்தைகளுக்கு இன்றைய தேவை.

சென்னை மக்களின் தேவை 30 லட்சம் லிட்டர். ஆனால் 14.5 லட்சம் லிட்டர் தான் ஆவின் விநியோகிக்கிறது.

ஆவின் பால் பூத்களுக்கு செல்வதற்கு முன்னாலேயே அவை விற்று தீர்ந்து விடுகிறது அதிக விலை கொடுத்து தனியார் பால் வாங்க வேண்டி இருக்கிறது.

இதுதான் இன்று தமிழக மக்கள் சொல்வது. தங்கம் மோதிரத் தை விட தங்களது தேவை இன்று பால் தான், என்று குழந்தைகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *