தவெக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​யாக தெரிவிக்​கப்​பட்ட ரூ.2,500 யாருக்​காவது வந்​துள்​ளதாதா? – தவெக தேர்தல் வாக்குறுதியை குறிப்பிட்டு பிரேமலதா கேள்வி!!

மதுராந்தகம்:
மது​ராந்​தகம் அடுத்த நெல்​வாய் இணைப்பு சாலை பகு​தி​யில் திமுக வேட்​பாளர் பரந்​தாமனுக்கு ஆதர​வாக வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, தவெக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​யாக தெரிவிக்​கப்​பட்ட ரூ.2,500 யாருக்​காவது வந்​துள்​ளதா என கேள்வி எழுப்​பி​னார்.

மேலும் அவர் பேசி​ய​தாவது: இடைத்​தேர்​தலில் திமுக வேட்​பாள​ருக்கு ஆதர​வாக நான் பிரச்​சா​ரம் செய்​வதற்கு எதிர் தரப்​பில் உள்​ளவர்​கள் எதிர்ப்பு தெரிவிக்​கின்​றனர்.

மக்​கள் பிரச்​சனையை பற்றி மட்​டும்​தான் உதயநிதி பேசி​னார். ஆனால், ஆதவ் அர்​ஜூனா தேவை​யில்​லாமல் பதவி வில​கு​வீர்​களா என பேசி வரு​கிறார்.

இடைத்​தேர்​தலில் நிச்​சய​மாக திமுக வெற்றி பெறும். பேசுவதற்கு முன்பு ஆதவ் அர்ஜுனா யோசனை செய்து பேச வேண்​டும்.

மது​ராந்​தகம் மக்​கள் துரோகத்​துக்கு துணை​யாக நிற்​க​மாட்​டார்​கள். மது​ராந்​தகம் தொகு​தி​யில் இடைத்​தேர்​தல் வந்​ததற்கு காரணம் என்​னவென்று உங்​களுக்கு தெரி​யும்.

வாக்​களித்த மக்​களுக்கு துரோகம் இழைத்​து​விட்​டு, தற்​போது மீண்​டும் வாக்கு சேகரிக்க தவெக வேட்​பாளர்​கள் வரு​கிறார்​கள். முதல்​வர் விஜய் ரூ.2,500 வழங்​கு​வ​தாக வாக்குறுதி அளித்தார்.

யாருக்​காவது அந்தப் பணம் வந்​திருக்​கிற​தா. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *