4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; முதல்வர் விஜய்யின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு!!

சென்னை:
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்ததடை விதிக்கக்கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடா ஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிக ளுக்கும் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என கடந்த ஜூலை 10 அன்று இடைக்காலத் தடை விதித்தது.

அதையடுத்து, இந்த தொகுதிகளுக்கு நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கை சுட்டிக்காட்டி இடைத்தேர்தல் நடத்தாமல் தள்ளிப்போடுவது பொதுமக்கள் நலனுக்கு எதிரானது, எனவே இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டு மெனக்கோரி முதல்வர் விஜய் மற்றும் கரூர் எம்.ஆர். விஜய பாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப்பூர்வ வாதம் வருமாறு: இடைத்தேர்தல் அறிவிப்பை தள்ளிப்போடுவது என்பது நிரந்தரமானது அல்ல.

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்தவுடன் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

திருச்சி கிழக்கு உள்ளிட்ட மற்ற 4 தொகுதிகளைப் பொருத்த மட்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 151 (ஏ) பிரகாரம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கூறப்படவில்லை.

தேர்தலை நடத்த ஆறு மாத காலஅவகாசம் உள்ளது. தேர்தலில் போட்டியிட்டவர் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த தொகுதி காலியாக இருப்பதாக கருதமுடியாது.

தேர்தல் வழக்குகளை ஆறு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனக்கூறும் சட்டம், அதே 6 மாதத்துக்குள் இடைத் தேர்தலையும் நடத்த வேண்டும் என காலவரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

இடைத்தேர்தலை இந்த காலகட்டத்துக்குள் நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் விசாரணையை துரிதப்படுத்தினால் அதை தேர்தல் ஆணையமும் வரவேற்கிறது.

தேர்தல் வழக்குகளில் தீர்வு காணப்பட்ட பிறகு பெருந்துறை தவிர மற்ற 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

எனவே தேர்தல் வழக்கை கணக்கில் கொள்ளாமல் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென்ற முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏ-க்கள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிராகரித்து, தேர்தல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு (செப்.30) தள்ளிவைத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவில், ‘பெருந்துறை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கு கடந்த செப். 8 அன்று நிராகரிக்கப்பட்டு வி்ட்டதால், அந்த தொகுதி யைப் பொருத்தமட்டில் இடைத்தேர்தலுக்கான தடை நீங்கி விட்டது.

தற்போது பெருந்துறை தொகுதி காலியாக உள்ள நிலையில், தேர்தல் வழக்கு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் வரும் நவ.24 வரை உள்ளது.

எனவே அந்த தொகுதியைப் பொருத்தமட்டில் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியாக முடிவு எடுக்க அனுமதியளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *