அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை, தாராபுரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத் திடலில் முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் ஐக்கியம்!!

தாராபுரம்:
அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை, தாராபுரத்தில் நடக்கும் பொதுக் கூட்டத் திடலில் முதல்வர் விஜய் முன்னிலையில் இன்று தவெகவில் இணைந்தார்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்தனர்.

இதனையடுத்து தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் அவர்கள் இருவரும் தவெக சார்பில் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் மதுராந்தகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் விஜய், இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பிரச்சார பொதுக் கூட்டம் நடக்கும் திடலில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்துள்ளார்.

இன்று மாலை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வந்து சேர்ந்த முதல்வர் விஜய்யை, தவெக கட்சித் துண்டுடன் அதிமுக முன்னாள் அமைச்சரான செம்மலை வரவேற்றார்.

செம்மலை கொண்டுவந்த கட்சித் துண்டை வாங்கி, அவரின் கழுத்தில் போட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டார் முதல்வர் விஜய்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள செம்மலை தவெகவில் இணைவதாக பேச்சு எழுந்தது.

இந்தச் சூழலில், அவர் இன்று தவெக பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்து அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் அவர் இணைந்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *