ராமநாதபுரம் மக்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் குரல் கொடுப்பார் – அண்ணாமலை!!

ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய எ அவர், ஒரு முன்னாள் முதலமைச்சராக நாடாளுமன்றத்திற்கு செல்ல போகும் ஒருவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்தான்; ஓபிஎஸ் ஐயா வெற்றி பெற்றால் நாம் அனைவரும் வெற்றி பெற்ற மாதிரி; மக்கள் மறவாமல் வாக்களிக்க வேண்டும். ராமநாதபுரம் மக்கள் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்தினார்; மோடி இங்கு நிற்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டார்கள்.

ராமநாதபுரத்தில் பிரதமருக்கு பதிலாக அவரால் களமிறக்கப்பட்டவர், ஓ.பி.எஸ். மோடி அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் ஓபிஎஸ்; அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்-ஐ கருணாநிதி வெளியேற்றியதை போல் ஓபிஎஸ்-ஐ ஈ.பி.எஸ் வெளியேற்றி இருக்கிறார். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் உடன் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தால் பேச முடியும்; அரசியலைக் கடந்து ஓபிஎஸ் மீது மோடிக்கு தனிப்பாசம் உள்ளது; ஓபிஎஸ் தோற்றுவிட்டால் அது நான் தோற்பது போன்றது; கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டு நாடகம் ஆடுகிறது திமுக; ராமநாதபுரம் மக்களுக்கு நடந்த அநியாயத்துக்கு நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் குரல் கொடுப்பார் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *