இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால் டு ட்ரம்ப் புகழாரம் !!

புதுடெல்லி:
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளை துபாய் விமானத்தை தரையில் மோதி நொறுக்க முயன்ற துணை விமானியின் தாக்குதல் முயற்சியை இந்தியாவை சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் முறியடித்தார்.

இந்நிலையில், அவரை ஹீரோ என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழ்ந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி நேற்று (புதன்கிழமை) காலை 180 பயணிகளுடன், போயிங் 737 மேக்ஸ் 8 என்ற விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த ‘காக்பிட்’ அறையில் விமானி ஸ்மித் மச்சார், துணை விமானி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் விமானி ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு விமானத்தின் துணை விமானி விமானத்தைக் கடத்தி தரையில் மோத முயற்சித்தது தெரிய வந்தது.

இருப்பினும் அவருடன் ஸ்மித் கடுமையாகப் போராடியுள்ளார். கத்திக்குத்து காயமடைந்த நிலையிலும் சாமர்த்தியமாக விமானத்தைச் சவுதிக்குத் திருப்பி 180 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றினார்.

அவருக்கு விமானத்தில் பயணித்த பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

பிரதமர் மோடி: “கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ. காயமடைந்த சூழலில் பயணிகளின் உயிரைக் காக்கும் வகையில் தனது துணிச்சலையும் மன உறுதியையும் அவர் வெளிப்படுத்தினார்.

அவரது வீரதீர செயல் நூற்றுக்கணக்கான உயிர்களை காக்கவும், பெருந்துயரத்தை தவிர்க்கவும் உதவியது.

அவரது செயலை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர் விரைந்து குணம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று சமூக வலைதள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: “துணை விமானி கத்தியால் குத்தியதில் அந்த விமானி (ஸ்மித் மச்சார்) மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

அவரது சூழல் இப்போது கூட அப்படித்தான் உள்ளது என்று நினைக்கிறேன். இருப்பினும் அத்தகைய நிலையிலும் சமயோசித புத்தி உடன் செயல்பட்ட அவர் ஒரு ஹீரோ என்றே சொல்லலாம்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *